பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 181 சமயங்களில் அது கட்டுக்கு அடங்காமல் பெருகிவிடுவதும் உண்டு; அதன் பயனாய், திருச்சிராப்பள்ளியில் அத்தகைய எதிர்ப்பு காரணமாக, பல கிறித்துவர்கள் கொல்லப் பட்டனர்; மாதா கோயில்களும், மதமாற்ற நிலையங்களும் இடிக்கப்பட்டன; அஃதறிந்த நொபிலி, மதுரைக்கு விரைந்து திருமலையால் முறையிட்டார். திருமலை அவரை அன்புடன் வரவேற்று. அவர் கூறுவன கேட்டு, அவர்கள் இழந்தன. வற்றைத் திருப்பித் தரவும், அவர்கள் கட்டிய மாகாகோயில் களில் அவர்கள் முழு உரிமை உடையவராகவும், அவர்கள் விரும்பும் இடங்களில் தங்கி வாழவும் அனுமதி வழங்கி ஆணைகள் பிறப்பித்தார். தொபிவிக்குப் பிறகு கிறித்துவச் சமயப்பணிக்குத் தலைமை ஏற்று, 'நொபிலி வித்துான்றிய சமயப்பயிரை நீர் ஊற்றி வளர்த்தவர்” என்ற புகழ் பெறப் பணியாற்றிய மார்ட்டின் பாதிரியார், சொக்கநாத நாயக்கர் காலத்தில் 1656ல் மறைந்தார். சொக்கநாதன் காலத்தில் நிகழ்ந்த மகம்மதியர் படையெடுப்புக்களும், அதையடுத்து ஏற்பட்ட கொடிய பஞ்சங்களும், கள்ளர்களின் திடீர் தாக்குதல் களும் கிறித்துவ சமயப் பணிக்குப் பெருங்கேடு புரிந்தன. கிறித்துவப் பாதிரிமார்கள், தங்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்புத் தேடி, சத்தியமங்கலமும் திருச்சியும் சென்று தங்கினர். | இந்நிலையில், நாட்டில் நேர்ந்த கொலை, கொள்ளை களுக்கெல்லாம், பாதிரிபார்களே காரணம் எனக்கொண்டு, பொதுமக்கள் பாதிரிமார்களைக் கொல்லவும், கொடுமை செய்யவும் துணிந்தனர்: பாதிரிமார் மீது பொதுமக்கள் சாட்டிய குற்றச்சாட்டு, மிகக் கொடுமை வாய்ந்தனவாக வும், பொதுமக்கள் ஆத்திரத்தைத் துாண்டுவிடுவனவாகவும் இருக்கவே, அரசன் பாதிரிமார்களை, நாட்டை விட்டு வெளியேறுமாறு பணித்தான். ஆனால், பாதிரிகளின்