பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 17 வெண்ணிற ஆம்பலும் மலர்ந்துள்ளமையால் அவ்வகழி: கழிநீர் தந்த நாற்றம் அற்று மணம் வீசும் மாண்பும் உடைத்து." அகழிநீர் அலைக்க, நகரை வளைத்து நெடிய மதிற்கவர் நிற்கும். விண்ணாற உயர்ந்து அகழலாகா அகலமும், அழிக்கலாகாத் திண்மையும் வாய்ந்து விளங்கும் அம்மதில்கள் அகழியைத் துர்த்துப் பகைவர் படை, தன் மீது பாயுமா :ாயின், அந்நிலையில் அவர் படையைப் பாழாக்கும், தாமே இயங்கவல்ல இயந்திரப்படைகள் எண்ணற்ற பொறுத்தப் பெற்றிருக்கும்." r நகரின் உள்ளே நால் திசைக் காற்றும் நன்கு நுழைதற் கேற்ற நேடிய வாயில்கள் நகரின் நாற்புறமும் அமைந் திருக்கும். பகைவென்று மீளும் பாண்டிநாட்டு வேழப்படை, வேன்று உயர்த்திய வெற்றிக்கொடிகளோடும் புகுதற்கேற்ற உயர்வுடையன அவ்வாயில்கள் மலையைக் குடைந்து பண் ணினாற் போலவும், மழை மேகம்படிந்த மலைகளைப் போகவும் தோன்றும் நெடிய அவ்வாயில்கள், என்றும் வெள்ளம் வற்றாது விளங்கும் வைன:யாறுபோல், மக்கள்: இரவு பகல் எப்பொழுதும் இடையறாது வழங்கும் மாண்புடைய." வாயிற்றலையில், மதுரை கன்னன் மாற்றலரைவென்று பெற்ற வேற்றிகளை விளக்கிக் காட்ட நாள்தோறும் நாட்டியக் கொடிகள் வரிசையாக நின்று பறக்கும். நான்கு அாயில்களிலும், வாளேந்திய யவனவீரர்கள், இரவுபகலாக இருந்து காவல் புரிவர். அவர் காவலைக் கடந்து அகநகர் புகுவது அரிதினும் அரிதாம். அகநகர் வாழ்வார் புறநகர் போகவும், புறநகர் வாழ்வார் அகநகர் புகவும் வாயில்கள் தோறும், அகழியின் குறுக்கே சுருங்கை வழிகள் அமைக்கப் பெற்றிருக்கும். வாயிலைக் கடந்து செல்லும் மாவும்