பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 காலத்தோறும் தமிழகம் தலைவன், சொக்கநாதனைக் கண்டு தங்கள் சமயக் கொள்கை இது: அது பரப்பத் தாங்கள் மேற்கொள்ளும் அறப்பணி இது எனத் தெளிவாக எடுத்துக் கூறவே, சொக்க நாதன் ஓர் அளவு மனநிறைவு அடைந்து, பாதிரிமார்களை மாதா கோயில்களிலேயே வாழ அனுமதித்ததோடு அவர் களுக்கு வேண்டும் பாதுகாப்பு அளிக்கவும் உறுதி அளித் தான். இந்நிலையில், மறவர் நாட்ட்ைச் சேர்ந்த தலைவன் ஒருவனைக் கிறித்துவனாக மாற்றிய செயல், மறவர் களிடையே பெரிய கொதிப்புணர்வை மூட்டிவிட்டது; மேலும், மதுரைக்கும், மைசூருக்கும் இடையில் போரும் மூண்டுவிட்டது: கூறிய இக்காரணங்களாலும், தங்கள் சமயப் பணியை விரிவாக்கக் கருதியதாலும் பாதிரிமார்கள் மதுரையோடு அமையாது, வேலூர், கோல்கொண்டா போலும் வடநாட்டுப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டி தேர்ந்தது. மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் காலத்தில், 1647-ல் மதுரை மதமாற்ற நிலையத் தலைமையை ஏற்றுக் கொண்ட, பிரிட்டோ பாதிரியார், தம் சமயப் பணியை மறவர் நாட்டில் தொட்ங்கினார். கிறித்துவ எதிர்ப்பு ணர்ச்சி மறவர் நாட்டில் கட்டுக்கு அடங்காமல் இருந்தது. சமயப் பணி ஆற்றிவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த பிரிட்டோ பாதிரியாரை, மறவர் மன்னரின் மந்திரி எனக் கூறிக்கொள்ளும் ஒருவன், பிடித்துக் கொண்டு, அவரையும், அவர் மாணவர்களையும், சிவனை வழிபடுமாறு பணிக்க அவர்கள் மறுக்கவே அவர்களின் காலையும், கையையும் கட்டி, மரத்தோடு அவர்களைக் கட்டிப்போட்டுக் கொடுமை, செய்தான்: அஃதறிந்த சேதுபதி தலையீட்டினால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால், மறவர் நாட்டில் மதப் பிரசாரம் செய்யக் கூடாது என எச்சரிக்கப்பட்டனர் என்றாலும், பிரிட்டோ, தன் சமயப் பணிகளை மறவர். நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளவே விரும்பினார்.