பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 183 ஆங்குத் தன் உயிருக்கு நேர இருக்கும் கேட்டினை எண்ணிப் பார்த்தாரல்லர்: துணிந்து மறவர் நாட்டுள் புகுந்து, மறவர் பலரை மதமாற்றம் செய்தார்; அவ்வாறு மதம் மாறியவர்களுள் குறிப்பிடத்தக்கவன், இராமநாதபுர அரசுக்கு வாரிசு எனக் கூறப்படும் தடியத் தேவனாவன். இச்செயல், கிறித்துவ எதிரிகளுக்குக் கோபத்தை மூட்டி விட்டது: எல்லோரும் ஒன்று திரண்டு, இராமநாதபுர அரசனாகிய கிழவன் சேதுபதிபால் சென்று, கிறித்துவப் பாதிரிமார்களின் சமயப் பணியால் நாடே கெட்டுவிட்டது: அவர்கள் முயற்சியால் மறவர் நாட்டில், கிறித்துவர் தொகை பெருகிவிடும்: கிறித்துவர் :ெ ட்டால், ஆளும் அரசன் கிறித்துவனாக இருக்க ே என்ற நிலை ஏற்பட்டு, கிழவன் சேதுபதி முடிதுற நேரிடும் என்றெல்லாம் கூறவே, கிழவன் சேதுபதி, மறவா நாட்டில் மாதா கோயில்களையெல்லாம் இடிக்கவும், பிரிட்டோவை யும், அவர் வழியினரையும் சிறைபிடித்து வரவும் ஆணை விட்டான். தடியத்தேவன் தலைநகரில் இருந்ததாலும், நாட்டில் மிகப்பலர் கிறித்துவராகம்ாறி இருந்ததாலும், பிரிட்டோ வுக்குத் தண்டனை தருவதில் தயக்கம் காட்டினான்கிழவன் சேதுபதி, அதனால், பிரிட்டோவை, மறவர் நாட்டில், தன் உடன் பிறந்தானுக்கு உரியதான உறையூர்க்கு அனுப்பி, ஆங்கே கொலை செய்து விடுமாறு மறைமுகச் செய்தி அனுப்பி விட்டான். அதுபோலவே, பிரிட்டோ, ஆங்கே கொலை செய்யப்பட்டார். பிரிட்டோ கொலை செய்யப்பட்டதால், மறவர் நாட்டில் கிறித்துவ சமயம் மங்கிவிடவில்லை; மாறாக, முன் னினும் பன்மடங்கு வேகமாக வளரத் தொடங்கிற்று. பிரிட்டோ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்கெல்லாம், அவர் கொலைக்குக் காரணமாய் இருந்த உறையூர்த்