பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காலந்தோறும் தமிழகம் மாக்களும் எண்ணிக்கான இயலாப் பெருந்திரளினராதலின், அச்சுருங்கைகள், யானைப்படை புகினும் பாழகாத். திண்மை உடையவாமாறு அமைக்கப் பெற்றிருந்தன." மதுரை மாநகரின் அகநகர்த் தெருவுகள், அகன்றும் நீண்டும் ஆறுபோலும் காட்சி நல்கும் அழகுடையவாம்: அதனால் அத்தெருவுகள், காற்று எக்காலத்தும் வீசும் வாய்ப்புடைய; அத்தெருவுகளில், தென்றலும் வாடையும் தடையின்றிப்புகுந்து உலாவும்." வாயிலைக் கடந்து, அந்நகர்க்குட் செல்வார், முதற்கண் அடியெடுத்து வைப்பது, நகரத்துக் செல்வக்குடியில் பிறந்த நம்பியர் விரும்பும் பரத்தையர் வீதி, பரத்தையர் அப் பெருங்குடிச் செல்வரோடு புறநகர் புகுந்து, பொழிலாடியும் புனலாடியும் மகிழ்தற்கு வாய்ப்பளிக்கும் வண்ணம், அவர் வாழும் வீதி, புறநகரை அடுத்து அமைந்திருந்தது.' பரத்தையர் வீதியை அடுத்துவரும் பெரிய வீதிகள் இரண்டும் நாடாளும் மன்னவன் காணத்தக்கனவும், நாட்டில் வாழும் மக்கள் காணத்தக்கனவுமாய் இருவகைக் கூத்துக்களிலும் வல்ல கூத்தியர் வாழும் இடங்களாம்.' கூத்தியர் வீதியைக் கடந்தால் வருவது தொழிலாளர் வாழிடம். சங்கை அறுத்துக் கைவளை முதலியன கண்டந்து தருவாரும், துாயமணிகளுக்குத் துளையிட்டுத் தருகாரும் . உருக்கி வார்த்த பொன்னால் அணி பல ஆக்கி அளிப்பாரும், பொன்னை உரைத்து நோக்கி, மாற்றும் மதிப்பும் காண் பாரும், ஆடை நெய்து அளிப்டோரும் செம்பால் கலம்புனை வாரும், கச்சும், குச்சும் கட்டித் தருவாரும், மலர் வகையும் மணப்புகைவகையும் அறிந்து தருவாரும், ஓவியரும், இவர் போலும் பிற தொழிலாளர்களும், நகரின் அப்பகுதியில் ஒன்று கலந்து வாழ்ந்திருப்பர்."