பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் . 19 தொழிலாளர் வாழும் வீதியை அடுத்து, அவர்கள் தொழில் புரிந்து அளித்த பல்வகைப் பொருள்களும் விற்கும் நாளங்காடி அமைந்திருந்தது. ஆங்கு வகை வகையான வண்டிகள், வட்டைகள், தேர்மொட்டு, மெய்க்கவசம்: அங்குசம், தோலால் ஆன கையுறு போலும் போர்க்குப் பயன்படும் பொருள்கள், அகியா யோகம் முதலாம் மருந்து வகைகள், குழியம் முதலாம் மணப்பொருள்கள், வெண்மயிர் விசிறி, பன்றி முதலாம் உருவம் வரைந்த ஒவியப் படங்கள் குத்துக்கோல், செங்டாலும், வெண்கலத்தாலும் வனையப் பெற்ற புதுப்புதுக் கலங்கள், மாலை வகைகள், வெண்சங்கை வாளால் அறுத்துச் செய்தப் பல்வகைப் பொருள்கள். தந்தத்தைக் கடைந்து அந்த கணக்கற்ற பொருள்கள், மணம் வீசும் புகைதருபொருள்கள். மேனிக்கும் மயிருக்கும் பூசும் சாந்து வகைகள் என்பன போலும் இனம் விளங்கா எண்ணற்ற பொருள்கள் குவிந்து கிடக்கும்.19 . அங்காடி வீதிக அடுத்து, அதற்கு இனமான, பல்வேறு வணிக வீதிகள் வரிசையாக அமைந்திருந்தன. முதலில் நிற்பது நவம ணிக் கடைவீதி, மரகதம், மாணிக்கம், முத்து பளிங்கு, பவனம், புருடராகம், வயிரம், வ்யிடுரியம்: கே: பேதகம் என்ற நவமணிக் குவியல்களும் அவற்றின் வகை: தெரிந்துரைக்கும் மக்கள் தொகையும் ஆங்கு மண்டிக் கிடக்கும்.17 - நவம ணிக் கண்டவீதியை அடுத்து, அம்மணிகளை அழுத்தி அணிகலன் ஆக்கத்துணை புரியும் பொன்விற்கும் பொ. க. கிைகள் வீஇ அமைந்திருந்தது. ஆங்குச் சாதரூபம்: கிளிச்சிறை என்று :ற்றுக்குறைந்த இளம்பொன் வகையும், ஆடகம் சாம்பூதம் மாற்று மிகுந்த பெரும் பென் வகையும் விற்கப்பெறும்; வாங்க வருவார், இன்ன இடத்தில் இன்னபொன் உளது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளு மாறு, அதை அறிவிக்கும் நால்வேறு கொடிகளும் ஆே காங்கே நின்று பறக்கும்."