பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 காலந்தோறும் தமிழகம் பொன்வாணிகர் வீதியை அடுத்து வருவது அறுவை வீதி, ஆங்கு நூலாலும், மயிராலும், நுண்ணிய பட்டாலும், இனத்திற்குப் பலநூறு வகையாக நெய்யப்பெற்ற ஆடைகள் அடுக்கி வைத்து விற்கபெறும்." ஆடைகள் விற்கும் அறுவை வீதியை அடுத்து உணவிற்கு பயன்படும் அல்வகைப் பொருள்களும் விற்கும் பலசரக்குக் கடைவீதி அமைந்திருக்கும். ஆங்கு, .ெ ந ல் ல ரி சி, புல்லரிசி, @j鲈”恕。 தினை சாமை, இறுங்கு, தோரை, இராகி, எள்ளு, கொள்ளு பயறு, உளுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை என்ற ஈரெண்வகை கூலப் பொருள்களும் குவியல் குவியல்களாய்க் கொட்டி வைக்கப்பெறும். மிளகுப் பொதிகளும், பாக்குப் பொதிகளும், காலமல்லாக் காலத்தும் வந்து அவன் குவியும்; நிறுக்கும் துலாக்கோலும், அளக்கும் மரக்காலும் உடைய ராய தரகர், ஒரிடத்தே நிற்கமாட்டாது ஒடி ஒடித்திரிந்து வாணிகம் புரிவர்." வாணிக வீதிகளுள் கடைசியில் இருப்பது காயும்கணியும் விற்கும் மாலைக் கடைவீதி. கூலவாணிகர் வீதியில், சோறு ஆக்கஉதவும் உணவுப் போருள்களை வாங்கியவர், கறிக்கு உதவும் உணவுப் பொருள், காய்கறிகளை வாங்கிக் அல்ல வாய்ப்பளிக்கும் வகையில், அவை விற்கும் கடைவீதி, கூல வீதியை அடுத்து அமைக்கப் பேற்றது. ஆங்கு மா, பலா, வாழை, முதலாம் கனிவகைகளும், வாழை வழுதுணம், பாகல் போலும் காய்வகைகளும், வள்ளி போலும் கிழங்கு வகைகளும், பருவத்தே மழை பெய்யத் துளிர்த் வளர்ந்த வகை வகையான கீரைகளும், கற்கண்டுக் கட்டிகளும், விற்கப்படும். வெளியூர் வணிகர்க்கு, இறைச்சி கலந்து ஆக்கிய இனிய சோற்றினை விற்கும் வாணிகமும் ஆங்கு நடைபெறும்.' -