பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவித்தனார் 21 வாணிக வீதிகளையெல்லாம் கடந்து சென்றால், நகரின் நடுவே அந்தணர்களும், அமைச்சர்களும், அரசரோ டொத்த பெருஞ்செல்வர்களும், அரசர்க்கு மகட்கொடை அளிக்கும் உரிமை பெற்ற உயர்ந்த வேளார்களும், அரசர் களும் வாழும் அழகிய மாளிகைகள் ஆங்காங்கே காணப் படும். நகரின் இடையிடையே, மூன்று வீதிகளும் நான்கு வீதிகளும். வந்துக்கூடும், சந்திகளிலும், சதுக்கங்களிலும், மன்றங்களும், பொதியல்களும், ஆன்றோர் உறையும் அறங்கூர் அவைகளும் அமைந்திருக்கும். மக்களும், மன்னவனும் வாழும் மனைகளுக்கும், மாடங் களுக்கும் மன்றங்களுக்கும் இடையிடையே, ஏற்புடைய இடங்களில் எல்லாம்.கடவுளர் உறையும் கோயில்கள். காணப்படும். மதுரைமாநகரில், சிவனுக்கும், செவ்வேளுக் கும், திருமாலுக்கும் பல தேவனுக்கும் எடுத்த கோயில்கள் எண்ணற்றன22. மதுரை மாநகரம், ஒரு பெரிய வாணிக நிலயமாக லோடு, அது ஒரு பேரரசின் தலைநகரும் ஆம். அதனால் அந்நகரத்து வீதிகளில் வந்து குவிந்து நிற்கும் பல நாட்டு மக்களுக்கு, அரசன் நாற்படையால், அவ்வப்போது இடையூறு உண்டாவதும் உண்டு. வேந்தன் படைகள், அவ் வீதிகளில் பலகால் போவதும் வருவதும் செய்யும். விதிகளில் திரிந்து விலை கூறி விற்கும் சிறு வணிகர் கூட்டமும், அவ் வணிகர்களைச் சூழ்ந்து நின்று வாணிகம் புரியும் மக்களும், அரசன் நாற்படை அவ்வீதியுள் வரக்கண்ட வுடனே, தம் உயிரிழந்து போனாற்போல் அஞ்சி, அலறிப் புடைத்து, அங்கும் இங்கும் ஓடி வீதியின் இருமருங்கும், மலையென உயர்ந்து நிழல் தந்து நிற்கும் மாடங்களில் ஒடுங்கி, அவற்றின் நிழலில் ஒதுங்கியிருந்து, படை அகன்றதும் பழையபடியே புகுந்து வாணிகம் புரிவர், ே