பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - காலந்தோறும் தமிழகம் பெருவெள்ளம் வத்து பாய்வதால், பெருகாமல், மழை மேகம் குடிப்பதால் குறையாமல் என்றும் தன்னிலையில் திரியாது விளங்கும் கடல் போன்றது மதுரை, அரசியல் பணிகுறித்தும், வாணிக வளம் கருதியும் வருவாரும், போவாரும் மல்கிய மதுரை மாநகரும், வாழும் மக்கள் தொகையில் எக்காலத்தும், எவ்விதமாற்றமும் பெறு வதில்லை. ஆங்குமக்கள் தொகையில் மாற்றம் நிகழ்வது மில்லை.4ே . மதுரைமாநகரின் மாலைத் தோற்றம், மனமகிழ்ச்சி தரும் மாண்புடைத்தாகும். நாகரிகம் மிக்க நம்பியர் : தம்மை ஆடை அணிகளால் அழகு செய்து கொண்டு, காற்றெனக் கடுக ஒடும் குதிரைகள் மீது அமர்ந்து, வீதிகளில் உலா வந்து, ஆங்காங்குள்ள அழகு நலங்களை கண்டு மகிழ்ந்து திரியும் காட்சியும், அகன்ற வீதிகளில் இருகருங்கும் வானளாவிய உயர்ந்த மாளிகைகளின் மேல் மாடத்தில் இருந்தவாறே நகர் அழகைக் கண்டு மகிழும் மகளிர் முகங்கள், அம்மாளிகையில் ஏற்றிய கொடிகள் காற்றால் ஆடுந்தோறும், மறைந்து, மறைந்து கருமேகத்தினிடையே புகுந்து புகுந்து வெளிப்படும் வெண்மதி போல் தோன்றும் காட்சியின்பமும், மதுரை வீதிகளின், மாலைக்காலத்து மறக்கவொண்ணா மாண்புகளாம்". ஞாயிறு மறைந்து இருள் பரவத் தொடங்கியதும், மனையுறை மகளிர், மாடங்களில் விளக்கேற்றி வைத்து, இல்லுறை தெய்வங்களுக்கு மலர் தூவி மணப்புகை காட்டி வழிபடுவர். நாடக மகளிரும், அவர் நலம் விரும்பும் நகர நம்பியரும் ஆடியும் பாடியும் அகமகிழ்வர். மகiன்ற மகளிர், மூதாட்டியர் துணை வரச்சென்று, தம் மாசுபோகக் குளத்தில் நீராடி மீள்வர். முதற் சூல் உள்ள தன் மகள் இனிதே மகiன்று மாண்புறுதலை வேண்டும் தாய், வேலனையும் தேவராட்டியையும் வரவன்முத்து வெறியாடி வழிபாடாற்றுவள். ஊர் மன்றங்களில் குரவைக் கூத்து