பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 23 ஒயாது. நாற்சந்திகளிலும், முச்சந்திகளிலும் பேச்சு மேடை களிலும் சொற்பொழிவும், இசையரங்குகளில் இசை விழாவும், நாடக மேடைகளில் நாடகமும் நடைபெற, மதுரை மக்கள் கண்டும் கேட்டும் களித்துச்செல்வர். இரவின் முன் யாமம் இவ்வாறு இனிதே கழியும். பின்னர் ஊரில் சங்கு, ஒலி அடங்கும். வணிகர் நம் கடைகளைத் திரை யிட்டு அடைத்து உறங்கப்போவர். அப்ப வணிகர் விடிந்ததும் அப்பம் சுடுதற்கு வேண்டும், பாகு, பகுப்பு. கற்கண்டு, கரைத்த மாவு இவற்றைப் பதம் பண்ணி வைத்து விட்டு, அவற்றின் அருகிலேயே கிடந்து உறங்கத் தொடங்குவர். திருவிழாக்களில் தெருக்கூத்தாடும் கூத்தர், தம் கூத்து முடிந்து உறங்கப் போவர்: ஊரே ஒலி அடங்கி உறங்கும். இடையாமத்தில் மதுரையைக் காண்பார்க்கு அது, பகலெல்லாம் ஓயாது ஒலித்த அலை அடங்கி உறங்கும் கடல்போல் தோன்றும்.' ஒரு நாட்டில் வாழும் எல்லோரும் நல்லோராய் வாழ்வர் என எதிர்பார்த்தல் இயலாது. அந்நாடு எவ்வளவுதான் நல்லாட்சி நிலவும் நாடாயினும் அந்நாட்டிலும் ஒரு சில தீயோர் வாழ்வர். மதுரை, மாநிதி விளங்கும் ஒரு மாபெரும் நகரம், அதனால், அந்நகர் ஒரு சில கள்வர் களுக்கும் வாழிடம் வழங்கியிருந்தது. கருநிற மேனியும், கல்லையும் மரத்தையும் துளைக்கும் கன்னக்கோலும், எதிர்த்தாரைத் தாக்க ஏத்திய நீண்ட வாளும், காலில் செருப்பும், கையில் நூலேணயும் உடைய அக்கள்வர், தக்க சமயத்தில் தம்மைக் காத்துக் கொள்ள உதவும் உடை வாளை ஆடைமேல் செருகி, அது தெரியாதவாறு, அதன் மீது கச்சணிந்து, களவாடற்கேற்ற காலமும் இடமும் கருதி, ஊரெல்லாம் உறங்கும் இரவின் இடையாமத்தில், மதுரை வீதிகளில் மறைந்து திரிவர். மதுரை மன்னன், ஆளும் முறையறிந்த அறிஞனாதலின், அக்கள் வரை அவர் அறியாமல் அஞ்சாது பின் தொடர்ந்துச் சென்று, அவர்