பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - - காலந்தோறும் தமிழகம் வாழிடம் அறிந்து கைப்பற்றி, மாநகர் மக்களையும், அவர் மாநிதியையும் காக்கவல்ல காவல் வீரரைப் பெற்றிருந்தான். களவு நூல்வல்ல அக்காவலர், பேயும் உறங்கும் நள்ளிரவிலும் உறங்காது, பெருமழை பெய்யும் காலத்திலும் ஓயாது திரிந்து காவல் புரிந்தனர். அதனால், மதுரை மக்கள், மனக் கவலையற்று அயர்ந்து உறங்கி இரவைக் கழித்தனர்." இரவுப்பொழுது இவ்வாறு இனிது கழியப் பொழுது புலரும் விடியற்காலையில், மதுரை மாநகர், மீண்டும், உயிர் பெற்று எழும். அந்தணர் ஒதும் வேத ஒலி, தேன் தேடித் திரியும் வண்டுகள் எழுப்பும் இன்னொலிபோல் எங்கும் வந்து இசைக்கும். யாழ்ப்பாணர் மனைகளில் மருதப்பண்ணொலி கேட்கும்; பாகர், யானைகளுக்கு உணவூட்டும் ஒலி உரக்க ஒலிக்கும்; குதிரைகள் எழுந்து புல்லுக் கொள்ளும் உண்ணும் கடை வீதியில், பணியாளர் கடைகளை மெழுக்கித் துப்புரவாக்குவர்; கட்கடைகளில் தொழில் தொடங்கிவிடும். மனைகளில், துயில் ஒழிந்து தொழில் தொடங்கிய மகளிர், கதவுகளைத் திறக்கும் ஒலி மணைதோறும் ஒலிக்கும், நாழிகை உணர்த்துவார், விடிந்தது பொழுது என விளம்புவர் அரசன் கோயிலில் பள்ளி எழுச்சி முரசு, இமிழ் எனும் ஒலி எழு முழுங்கும். கோழிச் சேவல்கள் கூவும்; அன்னச் சேவல்கள், தம்பேடுகளை அழைக்கும்; மயில்கள் அகவும். களிறுகள் பிளிறும்; வலியக் கூட்டில் வாழும் கரடியும் புலியும் முழுங்கும். செல்வர் மனை முன்றில்களில், முன்னாள் துரவிய மலர்களின் வாடல்களை அம்மனையுறை மகளிர் இரவு தம் கணவரோடு ஊடியக்கால் உதிர்ந்த முத்துக்க ளோடும், அணிகளோடும் அகற்றி அவ்விடங்களை அழகு செய்வர். மதுரை வீதிகளின் வைகறை வனப்பு இத்தகைத்து. * - மதுரை, பாண்டி நாட்டின் தலைநகர்; பாண்டியர் தலைநகர்கள் கடல் கோள் போலும் காரணங்களால் பாழகும் போகூழ் உடைய அந்நிலை மதுரைக்கும் பொருந்