பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&#ff", கோவிந்தனா 中 25 திற்றுப்போலும். அதனால், அது வையையாற்று வெள்ளப் பெருக்கில் ஆழ்ந்து ஒருமுறையும், கற்புடைத் தெய்வமாம் கண்ணகியால் எரியுண்டு ஒரு முறையும் ஆக இரு முறை அழிவுற்றது. ஆனால், மதுரையைப் பண்டு அமைத்த அரசர், நகர் அமைப்பின் முறையெலாம் உணர்ந்து நலமெலாம் அமைய அமைத்தமையால், அது இரு முறை அழிவுக்குள்ளாகியும், பழைய பாண்டியர் தலைநகர்கள் போன் அறவே அழிந்து போகாது, தமிழ்நாட்டின் தலை சிறந்த நகராய் இன்றும் நின்று நிலைபெறுகிறது. சான்றெண் விளக்கம் 1. "நெடியோன் குன்றமும், தொடியோள் பெளவமும் தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு மாடமதுரையும், பீடார் உறந்தையும், கலிகெழு வஞ்சியும், ஒலிபுனல் புகாரும்' f -சிலம் பு: 8 , 1-4. 2. மலி திரை ஊர்ந்து தண்மண் கடல் வெள்வலின் - மெலிவின்றி மேற்சென்று மேவார்நாடு இடப்படப், புவியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்” - -கலித்தொகை : 1.04 : 1-4

  • , , ,

சிலம்பு : 13 : 115-133 சிலம்பு : 13 :155-170 சிலம்பு : 13 : 176-179 சிலம்பு : 13 : 191-196; 15 : 115-116; 18 3-5 கா தமி-2 -