பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ ஒடாப் புட்கை உறையூர் பாண்டிநாட்டுத் தலைநகர், தொடக்கத்தில் கடல் கொண்ட நாட்டு மதுரையாய், இடைக் காலத்தில் கபாட புரமாய், இறுதியில் இக்கால மதுரையாய் மாறி மாறி வந்ததைப் போன்றே, சோணாட்டுத் தலைநகரும் மாறி மாறி வந்துள்ளது. கரிகாலன் காலத்தில், புகார், சோணாட்டின் தலைநகராய்த் திகழ்ந்தது. அவன் காலத் திலேயே, தலைநகராம் தகுதியினைப் பெறுவதற்கேற்ப, உறையூர் கோட்டையும் கோயிலும் உடையதாக அமைக்கப் பெற்றது. அவனுக்குப் பின், அதுவே சோணாட்டின் தலைநகர் ஆயிற்று. பிற்காலச் சோழர் காலத்தில், தலை நகர்த்தகுதியை உறையூர் இழந்து விட்டது. அது தஞ்சைக்கு மாறிற்று. தஞ்சையும் நிலைத்த தலைநகராம் வாழவில்லை. சோழர்களுள் சிலர், சிலகால் சிதம்பரத் தையும், சிலகால் காஞ்சியையும் தலைநகராகக் கொன் டனர். பாண்டியர் தலைநகர் ஒவ்வொன்றும், முன்னையது அழிந்த பிள்னரே, பின்னது அமைக்கப்பட்டது: ஆனால் சோணாட்டுத் தலைநகர்கள் அவ்வாறு அமையவில்லை. ஒன்று இருக்கும்போதே மற்றொன்று அமைக்கப் பெற்றுள்ளது. பாண்டியர் தலைநகராய்த் திகழ்ந்த நகரங்களுள், இன்று மதுரை ஒன்றே உளது; ஏனைய இரண்டும் அழிந்து விட்டன. இந்நிலைக்கு மாறாக சோணாட்டுத் தலைநகராய்த் திகழ்ந்த நகரங்களுள்,