பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 காலந்தோறும் தமிழகம் புகார் ஒன்றே அழிந்து போக, ஏனைய அனைத்தும் அழியாதே உள்ளன. கரிகாலன் காலத்திலும் அவனை அடுத்து அரியணை ஏறியோர் காலத்திலும் சோணாட்டிற்குச் சேரநாடும், பாண்டி நாடும் மட்டுமே பகை நாடுகளாம். அதனால், அப்பகைவரை அடக்க, அவர் நாடுகளுக்கு அணித்தாகத் தலைநகர் அமைத்தனர். அந்நிலை மாறிற்று: பிற்காலச் சோழர் காலத்தில் பல்லவர். இராட்டிரகூடர், சாளுக்கியர் என்ற வடநாட்டு அரச இனங்களே சோணாட்டுப் பகைவர் களாய் வந்து வாய்த்தனர். அதனால், அப்பகையைத் தாங்கவும், தாக்கி அழிக்கவும், அச்சோழர் தலைநகர், மெல்ல மெல்ல வடக்கு நோக்கி வந்து விட்டது போலும். கடல் வாணிகம் வளர்த்த வளமார் நகராய் விளங்கிய புகார், ஒரு சில காவம் சோணாட்டின் தலைநகராய்த் திகழ்ந்தது என்றாலும், சோணாட்டின் நிலைத்த தலை நகராய்ச் சங்க காலத்தில் விளங்கியது உறையூர் ஒன்றே: தமிழ் அரசர் மூவர் தலைநகர்களையும் ஒரு பாட்டில் வைத்துப் பாராட்டிய இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், "குட்டுவன், வருபுனல் வாயில் வஞ்சி' *செழியன் தமிழ்நிலைபெற்ற தாங்கருமரபின், மகிழ் நனை மறுகின் மதுரை' "செம்பியன் ஓடாப்புட்கை உறந்தை” எனச் சோணாட்டுத் தலைநகராக உறந்தை. ஒன்றையே கூறியுள்ளார்." இளங்கோவடிகள், "மாட மதுரையும், பீடார் உறந்தையும், கலிகெழு வஞ்சியும், ஒலிபுனல்புகாரும்'; எனப் பாராட்டிய அடிகளில், சோணாட்டு நகரங்களாக உறையூர் புகார் இரண்டையும் கூறியுள்ளார். எனினும், உறையூரைத் தமிழரசர்களின் கலைநகர்களுக்கிடையே வைத்து, அவற்றோடொப்பக் கூறி சோணாட்டு நகர் என்ற உரிமையால், உறையூரோடு உடன் வைத்துக் கூற வேண்டிய