பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 29 புகாரை, அவ்வாறு கூறாது, பாண்டி நாட்டுத் தலைநகர் மதுரைக்கும் சேரநாட்டு தலைநதர் வஞ்சிக்கும் இடையில் சோணாட்டுத் தலைநகர் என்ற உரிமை வாய்ந்த உறை யூரைக் கூறிய பின்னர், புகாரைப் பிரித்து வேறு கூறியது, அவர் காலத்தில் , சோணாட்டுத் தலைநகராய்த் திகழ்ந்தது உறையூரே என்பதை உறுதி செய்வதாகும். சோணாட்டின் தலைநகராய் விளங்கிய புகார், கடல் வாணிகம் வளர்ந்த பின்னர், வாணிகப் பெருநகராய் மாறி விட்டது. வாணிகம் கருதி வந்த வெளிநாட்டு மக்கள் வாழ்வால், ஆங்கு இடநெருக்கம் உண்டாயிற்று. காவிரி சூழக் கடலை அடுத்து இருந்த அந்நகர் எல்லை மேலும் விரிவு படுத்த இயலவில்லை. வளரும் மக்கள் பெருக்கத் திற்கு வாழிடம் தேடவேண்டியதாயிற்று: அக்குறைபாடு கண்டு கலங்கினான் அன்று சோணாட்டு அரியணையில் வீற்றிருந்த கரிகாற்பெருவளத்தான். கரிகாலன் போர்வேறி மிக்கவன்; போர் நுணுக்கம் அறிந்த அவன், பகை நாடுகளைச் சென்று தாக்கும் அண்மை யில் தன் படைத்தளம் இருக்கவேண்டும் என எண்ணினான், சோணாட்டின் ஒரு கோடியில் இருக்கும் புகார், அதற்குத் தகுதியுடையதன்று எனக் க ரு தி னா ன். மேலும் சோணாட்டின் பகை நாடுகளாய் பாண்டிநாடும் சேர நாடும், காவிரியின் தென் பால் திசைக்கண் உள்ளன . அப்பகை நாடுகள் மீது போர்தொடுத்துச் செல்லும் தன் படைகளை, இடையறாது பெருக்கெடுத்தோடும் காவிரி யாறு பலமுறை தடுத்து நிறுத்தித் தான் எண்ணியதை எய்தவிடாது தடைசெய்வது கண்டு பலமுறை கலங்கிய கரிகாலன், தலைநகர், காவிரியின் தென்கரையில் இருந்த தால் மிகுதியும் நலமாம் என எண்ணினான். அது தலை தகரை, வேறு தக்க இடத்தில் அமைக்க வேண்டும் என்ற அவன் கருத்திற்கு ஊக்கம் ஊட்டிற்று. சோணாட்டின் நடுநாயகமாய் விளக்கும் இடத்தைத் தேடத் தொடங்