பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - காலந்தோறும் தமிழகம் கினான். அக்கருத்தோடு, காவிரியின் எதிர்முகமாகச் சில காவதம் சென்று, காவிரியைக் கடந்து அதன் தென்கரை அடைந்தான், ஆங்கு அவன் கண்ட காட்சி, அவ்விடத்தையே தலைநகர்க்குரிய இடமாகத் தேர்ந்தெடுக்கத் துாண்டிற்று. கரிகாலன் காவிரியின் தென்கரையை அடைந்த பொழுது, ஆங்கு ஒரு கோழியும், ஒரு யானையும் போரிட்டுக் கொண்டிருந்தன. கோழியும் கோழியும் போரிடுவதும், யானையும் யானையும் போரிடுவதும் உலகியல்; அப்போர்க் காட்சிகளை அவனும் கண்டுள்ளான். ஆனால், கோழி, வேழத்தோடு போரிடுவது ஒரு புதுமை; அதுபோல் நிகழ்ச்சியை, அவன் அதுவரை கண்டதில்லை; அதனால் அப்போர்க்காட்சியை, ஆர்வமும் வியப்பும் மிகக்கண்டு நின்றான். போரின் முடிவு, அவன் வியப்பை அதிகமாக் கியது. கோழி, வேழத்தை வென்றதுt களிறு தோற்றுத் தொலைந்தது. கோழியின் வெற்றிக்கண்டு வியந்த வேந்தன், சிறிது நேரம் அதுவே நினைவாய் நின்று இறுதியில் அவ்வெற்றி, கோழியின் ஆற்றலால் வந்ததன்று, அது அக்கோழி வாழும் நிலத்தின் ஆற்றலால் நேர்ந்தது: அம்மண்ணில் முளைக்கும் புல்லும் போர் வெல்லும் எனத் துணிந்தான். படை அமைத்துப் பகை வெல்வத் துணை புரியும் தலைநகரை அமைக்கத்தக்க இடம் தேடி வந்த கரிகாலன், அதற்கு அவ்விடமே, தக்க இடமாம் எனக் கருதினான்; அவ்விடத்தில் எழுப்ப எண்ணிய நகருக்கு அந்நிகழ்ச்சின்iய நினைவூட்ட, கோழி என்றே பெயர் சூட்டி னான். கோழியின் மற்றொரு பெயராய வாரணம் என்ற பெயராலும் அது வழங்கிற்று. " தலைநகர் அமைத்தற்குக் காவிரியின் தென்கரைக் கண்ணதாகிய அவ்விடமே ஏற்றதாம் எனக் கருதிய கரிகாலன், மூதற்கண், ஆங்குக் காடென வளர்ந்திருந்த மரம் செடி கொடிகளை வெட்டி அகற்றினான்; பின்னர், மக்களும் மாவும் வாழ்தற்குத் தண்ணீர் இன்றியமையாதது.