பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 31 எனக் கண்டு, குளங்கள் பல தோண்டினான். நிலவள்மும், நீர்வளமும் உடையதாக ஆக்கிய பின்னர், ஆங்கு மக்கள் வாழ வானளாவ உயர்ந்து விளங்கும் மா டங்களையும் மனைகளையும் கட்டினான்; அரசனும் அவன் வணங்கும் கடவுளும் இருந்தற்கு அரண்ம்ப்னையும் ஆலயமும் அமைத் தான். வாழிடம் பெறமாட்டாது வருந்திய தன் கோனாட் டுக் குடிமக்களைக் கொண்டு வந்து குடியேற்றினான். அவ்விடத்தை இவ்வாறு மக்கள் வழங்கும் மாநகராக ஆக்கிய பின்னர், அதற்கு அரண் அமைக்கத் தொடங்கி னான்; நகரைச் சூழப் பெரிய மதில் அமைத்தான். அம் மதிலில் ஆங்காங்கே, பெருவாயிலும் சிறுவாயிலும் அமைத் தான். மதில் உச்சியில் அகத்துளவீரர் நின்று போரிடற்கு ஏற்றவாறு, ஏவறைகளையும், ஆங்கு அவ்வீரர்க்கு வேண்டும் அம்புகளைச் சேர்த்து வைக்கும் அம்புப் புதைகளையும் அமைத்தான். உறையூர்க்கோட்டை, இவ்வாறு, அரணுக் குரிய அத்தனை உறுப்புக்களையும் குறைவறப் பெறவே, ஆங்கு நிறுத்தி வைக்கப்பெற்ற சோழர் படை, பகைவர் பலர்; யாமோ துணையிலேம்: ஆகவே, போரிடும் துணிவு எமக்கு இல்லை" என அடங்கிவிடாது, "பகை எத்துணைப் பெரிதாயினும், அஞ்சாது பொருது அழிப்போம்" என்று இறுமாந்து கூறவல்ல, ஆற்றல் உடையதாயிற்று அழிக்க லாகா அரணும் அவ்வரணை நின்று காக்கவல்ல பெரும் 'படையும் பெற்ற உறையூர்க்கோட்டையில், வெற்றித் திருமகள், விரும்பி வீற்றிருக்கத் தொடங்கினாள். ' கரிகாலனைப் பாடிப் பதினாறு நூறாயிரம் பசும்பொன் பரிசில் பெற்ற புலவர் கடியலூர், உருத்திரங்கண்ணனார், உறையூர்க்கோட்டை அமைத்த கரிகாலன் பெருஞ்செய லைத் தாம் பாடிய பட்டினப்பாலையுள் வைத்துப் பாராட்டியுள்ளார். r சோழநாட்டின் சிறந்த படைத்தளமாக விளங்க வேண்டும் என்ற விருப்பத்தின் விளைவாகவே, உறையூர்'