பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. - காலந்தோறும் தமிழகம் அமைக்கப்பெற்றது. அதற்கேற்ப, அந்நகர் அரனுள் கடல்போல் பரந்த ஒரு பெரிய படை, பகைவர்மீது எத் நேரத்திலும் வேண்டுமாயினும், போர் தொடுத்து எழுதற் கேற்ப, எக்காலத்தும் நிறுத்தப் பெற்றி ருந்தது. அவ்வாறு நிறுத்தப்பெற்ற படையுள், சோணாட்டின் தலைசிறந்த யானைப்படையும் ஒன்று, அப்படையைச் சேர்ந்த யானை கள், உறையூரில் கோயில்விழாக் குறித்தும், கொற்றவை விழாக் குறித்தும், மனைகளில் நடைபெறும் மங்கல விழாக் குறித்தும் எழும் முரசொலி கேட்பினும், அதைப் போர் முரசின் ஒலி எனக்கொண்டு போர்வெறிகொள்ளும் பெருமையுடையவாம்; உறந்தை நகரின் இப்படைப்பெரு மையும், இப்படையைச் சேர்ந்த களிறுகளின் தோற்றமும் புலவர்களால் பாராட்டப் பெற்றுள்ளன. " படைத்தளமாக விளங்கும் அந்நகரைப் பகைவர் பாழ் செய்ய முனைவர் என்ற அச்சம், அதை அமைக்கும் பொழுதே எழுந்தது. அதனால், அந்நகர் அரனைப் பகைவர் எளிதில் அணுகாவாறு, அதைச் சூழக் காவம் காட்டினை வளர்த்திருந்தனர்; சிறு குன்றுகளை இடை இடையே கொண்டு பெரும்பாலும் நொச்சி மரங்களே வளர்ந்திருந்த அக்காவற்காடு, பகைவர்க்குப் பாய்ந்து உட்புகலாகாப் பெருந்தடையாய் அமைந்தது. புலவர் பாராட்டைப் பெறும் பெருமை, அக்காவற்காட்டிற்கும் வாய்த்தது. " - - உறையூர், சோழர்களின் படைநிற்கும் நகராக விளங்கி யமையால், உறையூரையும், அவ்வூர்க்கு உரிய சோழரையும் ஒருங்குவைத்துப் பாராட்டிய புலவர்கள் அனைவரும் “அடுபோர்ச்சோழர் அறங்கெழுநல்லவை உறந்தை," "மறங்கெழு சோழர் உறந்தை எனச் சோழர்களின் போர்வீரம் தோன்றவே பாராட்டிப் பாடியுள்ளனர். பொறையாறு என்ற ஊர் புறந்தை எனத் திரிந்து வழங்குவதுபோல், உறந்தை என வழங்கும் உறையூர்,