பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 33 . மக்கள் வாழும் வானளாவும் மாடங்களாலும், அரசர் வாழும் அரண்மனையாலும் சிறப்புடைத்து. அதன் மாட மாளிகைகளும் மன்னன் கோயிலும், பிறர் எளிதில் புகலாகா அரிய காவல் உடையவை; பாடி, பரிசில் பெறும் பாணன், பொருநன் முதலாம் இாவலர்களுக்கும், புலவர்களுக்கும் எளியவtய அவை, பகைவர் புகுதற்கு அரியவாம். உறையூர்ச் சோழனா கோப்பெருஞ் சோழனின் உயிர் ஒத்த நண்பராய பிசிராந்தையார் என்ற பாண்டிநாட்ப்ே புலவர், அன்னத்தைத் துாதுவிடுத்துப் பாடிய அழகிய பாட்டின், மரித்துறையில் அயிரை மீன் உண்டு, இமயம் நோக்கிச் செல்லும் அன்னமே, இடைவழியில் சோணாட்டில் உயர்ந்த மாடங்கள் நிறைந்த ஒரு மாநகர் தோன்றும்; அதுவே உறையூர், என் நண்பன் உறையும் ஊரும் அதுவே: அது அரிய காவல் உடையது; ஆனால், நீ, அவன் நண்பனும், புலவனுமாய் நான் அனுப்பும் தூது ஆதலின், வாயில் காவ லர்க்கு வருகையை உணர்த்தாதே உட்புகுந்து சோழனைக் கண்டு நலம் கூறிப் போவாயாக’ எனக் கூறியிருப்பது, அந் நகர்க்காவலின் அருமை பெருமை தோன்றத் துணை புரிவது அறிக. காவிரியின் தென்பால் அமைந்த உறையூர், அவ் வாற்றிற்கு நனிமிகச் சேய்மைக்கண் அமையாது, அக்காவிரி பாற்றுப் பாய்ச்சலால் வளம்பெற்ற வயல்களும் தோட்டங் களும் நிறைந்த அதன் கரைக்கு அணித்தாகவே அமைந் திருந்தது. புகார் போன்ற, காவிரியின் வடபால் நகரங்களில் வாழ்வார், உறையூரை எளிதில் அடை வதற்கு ஏற்றவாறு, காவிரியில், அன்று அணை அமையவில்லை. மக்கள், காவிரியை ஒடங்களில் ஏறிக் கடந்தே உறையூர் அடைத் தனர் : புகார் நகரத்தினின்றும் புறப்பட்ட, கோவலன் கண்ணகி, கவுந்தி ஆகிய மூவரும், காவிரியின் வடகரை வழியே சில காவதம் சென்று, பள்ளி ஒடம் ஏறிக் காவிரியைக் கடந்து, அதன் தென் கரை சேர்ந்தனர்' என ச் சிலப்பதிகாரம் கூறுவதும் காண்க."