பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காலந்தோறும் தமிழகம் அவ்வூர் அருகே ஒடும் காவிரி ஆழம் மிக்கது. சில காலங் களில், ஒடக்கோலும் நிலைபெற மாட்டாது ஆழ்ந்து போகு, மளவு, நீர்மட்டம் உயர்ந்துவிடுதலும் உண்டு." காவிரி வெள்ளப் பாய்ச்சலால் வளம் மிக்க நன்செய்கள் சூழ நடுவே நின்ற உறையூர்க்கு உணவுப் பஞ்சம் உண்டா வதில்லை; நெல் வயல்களே நல்ல அரணாக அமைந்த அம் மாநகரில் நெற்கூடுகள், மலை போல் நிறைந்திருக்கும் காட்சி, நின்று காணப் பேரழகு தரும்; அந்நெல் வளத்தைப் புலவர்கள் நாவாரப் பாராட்டியுள்ளனர். ' நாற்படைப்பெருமையும், நெல்வளப் பெருக்கமும் மிக்க ஒரு நகரத்தில், செல்வமும் சிறந்து விளங்கும் எனச்சொல்ல வேண்டியதில்லை, பொன்னும் பொருளும் குவிந்திருந்தன: நவமணியும், எண்வகைக் கூலமும் எங்கும் நிறைந்தன; வளம் கொழிக்கும் வேறு நகரங்களைக் கூறுங்கால், உறையூரையே உவமை காட்டிக் கூறுமளவு, அது உயர்ந்து விளங்கிற்று." உறையூரின் வளம் பெருகுவதற்குப் பெருந்துணை புரிந்தது, அந்நகரின் நெய்தற்றொழிலே; உறையூர் ஆடைகள், உரோம் நகரத்து உயர்ந்த செல்வர்களால் உவந்து வாங்கப்பெற்றன; 'ஆர்கரடிக்" என அவர்களால் அழைக்கப்பெற்ற உறையூர்ப் பூந்துகில் ள், உரோமப் பேரரசின் பொன்வளத்தையே பாழாக்குமளவு அந் நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டன; உறையூரின் அறுவை வாணிகம், தம்நாட்டுச் செல்வம், அவ்வாடையின் வரவால் சீரழிவது கண்டு, உரோமநாட்டு ஆட்சியாளர். அவ்வாணிகத்தைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் இயற்றுமளவு வளர்ந்து வளம் தந்தது என மேலைநாட்டு நிலநூல் ஆசிரியர்கள் கூறுகின்றனர். "சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' என்றார் ஒரு பெரும்புலவர்; ஒரு நாடோ அல்லது நகரமோ, அமைதி: