பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சா. கோவிந்தனார் 35 நிலவும் நல்வாழ்வு வேண்டின், ஆங்கு, அறிவன அறிந்து அறவழி காட்டும் ஆன்றோர் பலர் வாழ்தல் வேண்டும்; வாழும் மக்கள் உள்ளத்தை வன:i உடையதாக்கும் ஆற்றல் அவர்க்கே உண்டு; மக்கள், மனவளம் அற்றவராயின், ஆங்கு நில வளமும், நிதிவளமும் நிறைந்திருப்பினும் பயன் இல்லை; நல்வாழ்விற்கு வேண்டும் அமைதி அங்கு நிலவாது; அது , வளம் ஒன்றினாலேயே உண்டாம் ; ஆகவே, அம்மன இனம் உண்டாக்கும் மாண்புடைப் பெரியோர் வாழ்வு நனிமிக இன்றியமையாது; உறையூர், இதிலும் குறைபாடு டையதன்று; ஆன்றோர் பலர் அந்நகரில் வாழ்ந்திருந்தனர்; பழந்தமிழ்ப் பாடல்கள் மட்டும் புலவர் பலர் பெயர்களை நமக்கு அறிவிக்கின்றன. இளம் பொன் வணிகனார், ஏணிக் சேரிமுடமோசியார், கதுவாய்ச் சாத்தன், சல்லியன்.குமரன், சிறுகந்தன், பல்காயன், மருத்துவன் தாமோதரன், முடவன், முதுகண்ணன், சாக்கன், முதுசுத்தல், முதுகொற்றன், இவர் களே அப் புலவர்கள். - புலவர் பெருமக்களின் வாழிடமாக விளங்கிய உறையூரில், உலக மக்களுக்கு உய்யும் நெறி காட்டும் அருகனை வழிபட்டு அறமுரைக்கும் சமணச் சான்றோர் களும் வாழ்ந்திருந்தனர். மதுரை நோக்கிச் செல்லும் கோவ லனுக்கும் கண்ணகிக்கும் வழித் துணையாய் வந்த கவுந்தி அடிகள் எனும் மூதாட், யார், அவர்களோடு உறையூரில் ஒரு நாள் தங்கியபொழுது, ஆங்கிருந்த நிக்கந்தன் கோயிலுக்குச் சென்று, ஆங்குக் கோயில் கொண்டிருக்கும் அருகனை வணங்கிய பின்னர், ஆங்கிருந்த சமண முனிவர்களுக்குத் தாம் அறிந்த சில சமய உண்மைகளை உணர்த்தினார் எனச் சிலப்பதிகாரம் கூறுவது அறிக. - உறையூர், அறிவன அறிந்த ஆன்றோர்களும், அறம் உரைக்கும் சமணச் சான்றோர்களும் வாழும் இடமாய் விளங்கினமையால், அவ்வூர் மக்கள், அறவுள்ளமும் வாய்க்கப் பெற்று விளங்கினர். ஆங்குள்ள அறங்கூர் அவைகள், நீதி: