பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 காலந்தோறும் தமிழகம் مِہ ؟ வழங்குவதில் நெறி பிறழாவாயின. உறையூர் அவைக்குச் சென்றால், குறை தீர்க்கப்படும்; முறை வழங்கப்பெறும்; ஆங்கு அறமுறை கெடாது என மக்கள் மனதார நம்பினர்; நம்பியதோடு அதை நாடறியக் கறி, அவ் அவைகளை நாவாரப் பாராட்டினர். அழிக்கலாகா அரண், போர் வல்ல பெரும்படை, பெரிய பெரிய மாளிகைகள் நீர்வளம், நெல்வளம், நல்ல பல தொழில் வளம், இவ்வளங்களால் பெறலாம், பொன்வளம், ஆன்றோர் வாழ்வு, அறங்கெடா அவை எனப் பல நலம் பெற்று விளங்கினமையால், உறையூரின் புகழ் உலகெலாம் பரவிற்று: 'கெடலரும் நல்லிசை உறந்தை.” “செல்லா நல்லிசை உறந்தை” என்றெல்லாம் புலவர்கள் அதன் புகழ் பாடிப் பாராட்டியுள்ளனர். 4. சான்ற்ெண் விளக்கம் 1. சிறுபாணாற்றுப் படை 49-50:6-7; 92-93 2. சிலம்பு-8:3-4 - 3. முறம் செவி வாரணம் முன்சமம் முருக்கிய புறஞ்சிறை வாரணம் புக்கனர்' 'யானையைக் கோழி முருக்கலால் கோழியென்று பெயராயிற்று யானையைச் சயித்த கோழி தோன்றின விடம் வலிவுடைத்தென்று கருதி அவ்விடத்தை அதன் பெயராலேயே சோழன் ஊர்காண்கின்ற பொழுது, "முற்காலத்து ஒரு கோழி யானையைப்போர் தொலைத் தலான் அந்நிலத்திற் செய்த நகர்குக் கோழி என்பது. பெயராயிற்று” -