பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. பழந்தமிழர் சமயங்லை வழிபடாதாரை வருத்தும்; ஆகவே வழிபடல் வேண்டும் என்ற அச்சம், வழிபட்டால் இது கிடைக்கும் என்ற ஆசை; இது வழங்கிற்று; ஆகவே வழிபடல் வேண்டும் என்ற நன்றி உணர்வு என இம் மூன்று காரணங் களை அடிப்படையாகக் கொண்டே, உலகெங்கும் உள்ள மக்கள், கடவுள் வழிபாடு மேற்கொண்டுள்ளனர். அச்சம், ஆசை, நன்றியுணர்வு என வழிபாட்டுக் காரணம் மூன்றா யினும், அச்சம் காரணகான வழிபாட்டு முறையே முதலாவ தாகும். 'அஞ்சி ஆகிலும் அன்பு கொண்டாகிலும், நெஞ்சம் வாழி! நினை நின்றி யூரனை' என்ற நாவரசர் வாக்கில், அச்சமே முன் வைக்கப்பட்டுன்ளது உணர்க. இது தமிழகத்திற்கும் பொருந்தும். "ஞாயிறு போற்று தும்': "திங்களைப் போற்றுதும்'; "மாமழை போற்றுதும்” என்ற சிலப்பதிகாரக் கடவுள் வாழ்த்துப் பாடல்களை நோக்க, ஞாயிறும், திங்களும், மழையும் நல்கும் நலம் கருதி அவற்றை வழிபடும் வழக்கம் பிற்காலத்தே உருவாகி விட்டது எனத் தெரிகிறது என்றாலும் அவற்றை ஆதிகால மக்கள், அச்சம் காரண மாகவே வழிபட்டனர் என்பது தெளிவு. அரவு வழிபாடும் அச்சங்காரணமாக வந்ததே ஆகும். கடும் வெய்யிலும் கொடு மழையும் தங்களைத் துன்புறுத்தும்போது, அவை தம்மைத் தாக்காவாறு