பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 காலந்தோறும் தமிழகம் ஆல்வேம்பு போலும் மரங்கள் தடுத்து உதவக் கண்ட மக்கள், அவ்வாறு காக்கும் பணிகை, அம்மரங்களில் உறையும் கண்காணாக் கடவுள்களே ஆற்றின என நம்பி, அம்மரங்களில் உறையும் கடவுள்களை வழிபடும் நினைவில், அம்மரங்களையே வழிபடலாயினர். இவ்வகை யால், மரங்களை வழிபட்டுப் பழகிய மக்கள், அம்மரங்கள் இல்லாத இடங்களில், அம்மரங்களின் துண்டுகளையே நட்டு வழிபட்டனர். அதுவே அந்தறி எனப் பெயர் பெற்றது. கந்து என்ற சொல்லுக்குத் தெய்வம் உறையும் தறி எனப் பொருள் கூறு ஆர். - செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான், ஞாயிறு, திங்கள், மழை என இம்மூன்றையும் வழிபட்டதைப் போலவே, கொடு விலங்கு, கள்வர், பகைவர் முதலாயி முனாரிடமிருந்து, தம்மையும், தம் உடைமைகளையும் காத்து. காக்கும் அப்பணியில் உயிர் விட்ட வீரர்களையும் வழிபடத் தலைப்பட்டனர். அவ்வாறு வந்ததே வீரக்கல் அல்லது வீரக்கல் வழிபாடு. வீரர்களை வழிபட எழுந்த அப்பண்டை வழக்கமே, சிவப்பதிகாரக் காலத்தில் : கண்ணகிக்குச் சிலை அமைக்கும் பத்தினி வழிபாடாகவும்: இக்காலை, அறிவு, அரசியல், சமயம், சமூகம் ஆகிய துறைகளில் ஆக்கப் பணி புரிந்த பெரியார்களுக்குச் சிலை அமைக்கும் வழக்கமாகவும் மலர்ந்து விட்டது. அரும்பெரும் பணிகள் ஆற்றி மறைந்த முன்னோர் தளை வழிபட, வருவார்க்கெல்லாம் வயிறு புடைக்க உணவு வழங்கிய பெருஞ்சோற்றுதியன் சேரலாதனைத் "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியார்ப் பேணிய உதியன்' எனப் புகழ்மிகு பெயர் சூட்டிப் பாராட்டியுள்ளனர். கடவுள்களைப் பெயர் சூட்டாதும், இனம் பிரிக்காதும் வழிபட்ட முறை தொல்காப்பியர் காலத்திலேயே மாறி விட்டது. நிலங்கனில் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்பவும்.