பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 41’ ஆங்கு நிலவும் மரம், செடி, கொடி, மாவினங்களுக்கு ஏற்பவும், அந் நிலங்களை நால் வகையாகவும், ஐவகை. யாகவும் பிரிக்கக் கற்றுக் கொண்ட நிலையில் ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் எனக் கடவுள் நிலையிலும் வேறுபாடு கொண்டனர். காடுறை கடவுள் மாயோன்: மலையுறை கடவுள் சேயோன்; வயல் உறை கடவுள் வேந்தன், கடல் உறை கடவுள்.வருணன்; பாலைக்கு உரியவள் கொற்றவை எனக் கூறும் தொல்காப்பியர் கூற்றும் காண்க. ஒரு நிலத்துக்கு உரியவன் என்ற குறுகிய வரம்புக்கு அகப்படாமல் எல்லா நிலத்தும் உரியவனாய் நிலங்கடந்த நெடியோனாக விளங்கியதனாலோ, எ ன் ன வே rr தொல்காப்'யர் சிவனைக் கூறவில்லை எனினும், சங்ககால மக்கள் அவனை அறிந்தே இருந்தனர். சிவனே அல்லாமல், வாலியோன். பிரம்மன் காமன், யமன், இகுக்குமி போலும் .கடவுள்களையும் சங்ககால மக்கள் அறிந்து வழிபட்டனர். ஊர் நடுவே நிற்கும் மரத்தடிகளையே கடவுள் உறையும் இடமாகக் கருதி வந்த நிலை மாறிக் கடவுள் களுக்குக் கோயில், கோட்டம் என்ற பெயரில் தனிக் கட்டிடம் எழுப்பும் வழக்கமும் பண்டே இடம் பெற்று விட்டது. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும், சிலம்பும், மேகலையும் அக்கோயில்களின் வகை வனப்புகளை விரிவாக எடுத்துக்கூறி விளக்கியுள்ளன, 'நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயில் என்பது போலும் தொடர்களைக் காண்க. கடவுள்களை நீராட்டி, மலர்சூட்டி, பாலும், பழமும், பல்வகை உணவும் படைத்து வழிபட்டமக்கள், அக்கடவுள் களுக்கு உளநிறைவு உண்டாக்குவான வேண்டி, பல்வேறு வேள்விகளை எடுக்கவும் கற்றிருந்தனர். அத்தகைய வேள்வி களை முன்னின்று நடத்திப்புகழ் கொண்ட வேந்தர்களைப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, இராசசூயம் கா தமி-3 -