பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 காலந்தோறும் தமிழகம் வேட்ட பெருநற்கிள்ளி எனப்பட்டம் சூட்டிப் பாராட்டவும் முனைந்தனர். இவ்வாறு கடவுள் வழிபாட்டு உணர்வினராய் விளங்கிய தமிழர்களிடையே, நல்வினை, தீவினை; துறக்கம், நாசம், உம்மை, இம்மை; மறுமை; பேய் பிசாசு: காக்கை கரையின் விருத்தினர் வருவர்; காரி கரையின் பகைவர் வருவர்: ஆந்தை அலறின் ஆகும் கொடுமை நற்சொல் கேட்பின் நலம் விளையும்; கறவை கண்களில் நீர் மல்கினும், பால் உறையாது நிற்பினும், தீங்குகள், வந்துறும்; விண்மீன் வீழ்ச்சி வேந்தர்க்குத் தீங்கு; மகளிர்க்கு இடக்கண்ணும், ஆடவர்க்கு வலக்கண்ணும் துடிக்கின் இன்பம்; மாறித் துடிக்கின் துன்பம்: தீக்கனாத் தீங்குசெய்யும் என்பன போலும் நம்பிக்கை உணர்வுகளும்இடம் பெறலாயின. இவ்வாறு, சிவனையும், திருமாலையும், முருகனையும், பலராமனையும். கொற்றவையையும், திருமகளையும், மக்கள் வழிபட்டனராயினும், ஆவேறு உருவின ஆயினும், ஆபயந்த பால் லேறு உருவினதாகாது ஒர் உருவே ஆகும் என்ற உணர்வுடையராய், அக்கடவுள்களிடையே வேறுபாடு காணாமல், ஏற்றத்தாழ்வு புகுத்தாமல், ஒர் உணர்வின் பல்வேறு வடிவங்களாகவே மதித்து வழிபட்டனர்.