பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ. குதிரைமலை அஞ்சி சேரநாடு, முழுவதும் மலைகளே மலிந்து, பொதுவாக மலைநாடு என்றே வழங்கப்படும் என்றாலும், அம்மலை' நாட்டுள்ளும் சிறப்புடைய மலைகள் குதிரையும், கொல்வி யும், கோடையும் ஆகும். அவற்றுள், 'ஊராக்குதிரை” எனப் புலவர்களால் அழைக்கப்பெறும் குதிரைமலை, மழை மேகங்கள் வந்து தங்குமளவு மிக உயர்த்த முடிகளைக் கொண்டது. நால்வேறு திசைகளிலும் நறுமணத்தை வாரி வழங்கும் கருநீல மலர்கள் கவின் பெறக் காட்சி தரும் ஆழ்ந்த பெரிய சுனைகள் பல கொண்டது. ஓவெனும் பேரொலி ஓயாது எழ உருண்டோடும் எண்ணிலா அருவி களைக்கொண்டது. மிளகும் மூங்கிலும் மலிய வளர்ந்து நிறை பயன் தருவது. மலைச்சாரல் விளைநிலங்களில் மகளிரின் முன் கை போல மலர்ந்திருக்கும் காந்தள் மலர்க் கர்ட்சி கண்கொள்னாக் காட்சியாகும். அக்காந்தட் கிழங்குகளை உண்ணும் விருப்போடு இராக்காலத்தே, காட்டுப் பன்றிகள் கூட்டங் கூட்டமாய் வந்து, மன்ணைக் கீழ்மேலாகக்கிளற, அதனால் ஏர்கொண்டு உழ வேண்டாதே புழுதிபட்ட புன்செய்களில் மலைக்குறவர் தினை விதைத்துப் பயன் கொள்வர் அவ்வாறு பயன் கொண்ட அக்குறமக்கள், அப்பயனைத்தாம் மட்டுமே தனித் திருந்து நுகர எண்ணாது, முற்றி விளைந்த செந்தினை அரிசியையும், காட்டுப்பசுக்கள் பால் கறந்து கொண்ட பாலைக் கலந்து ஆக்கிய சோற்றைத் தம் மனை நோக்வி