பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 காலந்தோறும் தமிழகம் வரும் விருந்தினர்க்கெல்லாம், வாழை இலை படைத்து இட்டு மகிழ்வர். குதிரை மலைக்கும், அக்குதிரை மலைவாழ் மக்களுக்கும் உள்ள இம்மாண்பினைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். புலவர் கருவூர்க்கந்தப்பிள்ளை சாத்தனார். குதிரைமலையின் பெருமை அம்மட்டோடு நின்றுவிட வில்லை; நீர்ள்ள, நிலவளங்களோடு, நிறைநவமணிகளும் நிறையப்பெற்றிருந்தது அம்மலை விளைந்து கதிர் ஈன்று காட்சிதரும் ஜவனம் என்ற மலைநெற்பயிரைக் காத்துக் கிடக்கும் கானவர், காட்டு விலங்குகள் தொலைவில் இருக்கும் போதே அவைகண்டு அஞ்சி ஓடிவிடுமாறு, ஆங்காங்கே மூட்டிவிடும் காவல் தீ, காற்றாலோ, மழையாலோ அவிந்து போய்விட்டால், ஆக்காலை அத்தீயின் பணியைக் குறைவற நிறைவேற்றி வைக்குமாம், ஆங்காங்கே மண்டிக்கிடக்கும் மாணிக்க மணிகளிலிருந்து வெளிப்படும் பேரொளி. குதிரை மலைநாட்டு மண்ணில் கிடைக்கும் மாணிக்கங்களின் மாண்பினை வாயாரப் பாராட்டியுள்ளார், நவமணி வாணிகத்தில் வல்ல புலவர் வடம வண்ணக்கன் தாமோதரனார். இவ்வாறு மழையாலும், மழைதரு வளத்தாலும், மாணிக்க மணிகளாலும் மாண்புற்ற குதிரை மலையை ஆட்சி புரிந்தவரில் அஞ்சி என்பான் சிறப்புடைவனாவன். பெரும்புலவர் பரணரும், பெருஞ்சித்திரனாரும், தம்முடைய அகப்புறப் பாடல் வரிகளால் குதிரை மலை, அஞ்சிக்குரியது எனச் சான்று பகர்ந்துள்ளனர். தமிழ் நாடாண்ட அரச இனத்தவருள், சேரர், சோ ழர், பாண்டியர் என்ற பேரரச மரபினர் மட்டுமேயல்லாமல் அதியர், ஆவியர், மலையர், வேளிர் போலும், வேறு சில் சிற்றரசர் மரபினரும் இருந்தனர்; அவருள் அதியர் என்பார், - சேலம் மாவட்டத்தில், இன்று தர்மபுரி என வழங்கும்.