பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 45 தகடுரைத் தலைநகராகக் கொண்டு, அம்மாவட்டத்தின் வடபகுதியை ஆண்டு வந்தவராவர். தேவர்களை வழி பட்டும், அவர்களுக்கு வேள்வி எழுப்பி ஆவுதி அளித் தும், பெறுதற்கு அருமையுடையதும், அமிழ்தம் நிகர் சுவை யுடையதும் ஆகிய கரும்பைத் தமிழகத்துக்கு முதற்கண் கொண்டுவந்த பெருமை வாய்ந்தது அதியர் இனம் என அதன் பெருமை பாராட்டியுள்ளார் ஒளவையார், மலைநாட.ாண்ட மன்னர்களாம் சேர இனத்தவரோடு அதியர், ஒரு வகையில் உறவுடையவராவர். அதனால் "போந்தை வேம்பே ஆர் எனவரூஉம் மாபெருந்தானையர் மலைந்த பூ' எனக் கூறியவாறு சேர அரசர்க்கு உரியது எனக் கூறப்பட்ட பனந்தோட்டு மாலையை அதியர்க்கும் உரிமையாக்கிக் கூறியுள்ளார்கள் புலவர்கள். கடைச்சங்க காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டில், தமிழக அரசியலில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்த அதியர், கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் பேரரசு நடாத்திய விசயா லயன் வழிவந்த சோழர் காலத்திலு: சிறந்து வினங்கினர்; அச்சோழப் பேரரசுக்கும் படைத்துணை போகுமளவு பெரு வாழ்வு வாழ்ந்திருந்தனர் எனச் சோழர் காலக் கல்வெட்டு கள் பலவும் சான்று பகர்கின்றன. குதிரை மலைக்கு உரியவராகிய அதியர் இனத்தவர் இருந்து ஆண்ட இடம் தகடுராகும். இன்றைய தர்மபுரியே அன்றைய தகடுராகும் என்பதற்குத் தர்மபுரியை அடுத்திருச் கும் சிற்றுார்களின் பெயர்கள் அதியமான் கோட்டை அதகப்பாடி என அமைந்திருப்பதே போதிய சான்றாகும்: போரில் வெற்றி அல்லது தோல்வி காணா வில்வீரர் பலர் காத்து நிற்கும் காவற்காட்டான் சூழப்பெற்றது தகடூர்க் கோட்டை; அக்கோட்டைக்குள் அதியர் புகழ் பாடிவரும் புலவரும் இரவலரும் நுழைதல் இயலுமே யல்லது, படை கொண்டு பகைத்து வருவார் எவரும் நுழைய இயலா அரிய காவல் அமையப் பெற்றது.