பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. காலந்தோறும் தமிழகம் தகடுரைத் தலைநகரள்கக் கொண்டு அரசோச்சிய அதியர் அறவழி ஆட்சிபுரிந்து வந்தனர். அந்நாட்டு ஆனிரை கள், காலையில் காடு புகுந்து மாலையில் மனை திரும்பும் வழக்கம் உடையவை அல்ல; காடுகளில் தமக்குக் கேடு செய்யும் கொடு விலங்குகள் இன்மையால், காடு புகுந்து மேயும் அவ்வானிரைகள், மனை புகும் மனம் இலவாகித் தம் கன்றுகளோடு, இரவிலும் அக்காட்டிலேயே இருந்து விடும். வாணிகம் கருதியும், வேறு சில காரணம் குறித்தும் ஊர் ஊராகச் சென்றுவரும் வழிப்போக்கர்கள், வழி ஆறலை கள்வர் அற்று விளங்குவதால், இரவு வந்துற்றதும் அரண்மிக்க இடம் தேடி ஓடாமல், தாம் விரும்பும் இடங் களில் இருந்து இளைப்பாறிச் செல்வர். நாடு வளம் மிக்கது ஆகவே, நெல் முதலாம் உணவுப் பொருள்களைக் களவாடக் கனவினும் கருதார் ஆதலின், உழவர்கள் தாம் அறுத்து. அடித்துக் குவித்த நெல் முதலாம் விளைபொருட் குவியல் களைக் காவல் இன்றிக் களத்துமேடுகளிலேயே விட்டு வைப்பர், என அதியர் ஆட்சி நலப்பெருமையைப் பாராட்டி யுள்ளார் பெரும்புலவர் அரசில்கிழார். . தகடூர் ஆண்ட அதியருள், அஞ்சி என்பான், தான் பிறந்த அதியர் குடிக்குப் பீடும் பெருமையும் தேடித் தந்த பேரரசனாவன். அதனால், வேளாளர் குடியில் வந்தவர் அனைவருமே கிழார் என அழைக்கப்படுவர் என்றாலும், அக்குடிப் பிறந்த அனைவருள்ளும் சிறந்து விளங்கினமையால் பெரிய புராண ஆசிரியர் ஒருவர் பட்டுமே, சேக்கிழார் என அக்குடிப் பெயரான் அழைக்கப்படுதல் போல், அஞ்சி "ஒருவன் மட்டுமே அதியமான் என அக்குடிப் பெயரான் அழைக்கப்பட்டான். அவன் பெயர், அதியமான் நெடுமான் என, அவன் குடிப் பெருமை மேலும் தோன்ற அழைக்கப் பெறுதலும் உண்டு; ஒரோவழி, குடிப்பெயரோடு, இயற் பெயரும் இணைய அதியமான் நெடுமான் அஞ்சி என வழங்கவும் பெறும். -