பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 47 இவ்வாறு, அதியமான் எனவும், அதியமான் நெடுமான் எனவும், அதியமான் நெடுமான் அஞ்சி எனவும், நெடுமான் அஞ்சி எனவும், அஞ்சி எனவும் அவன் பெயரைப் பல்வேறு வகையாகவும் வழங்கி மகிழும் புலவர் பெருமக்கள், அவனை எழினி எனும் பிறிதொரு எழில்மிகு பெயராலும் அழைத்துள்ளனர். - தகடுரை அரசிருக்கையாகக் கொண்டு குதிரை மலை நாட்டை ஆண்டவன் அஞ்சி.