பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. களப்பிரர் கடைச் சங்க கால த் தி ற் கு ம், கி.பி. ஆறாம் நூற்றாண்டின் கடைப் பகுதிக்கும் இடைப்பட்ட காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகும். வடக்கே சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சியாலும், பல்லவர்களின் வளர்ச்சியாலும், சமுத்திரகுப்தனின் படையெடுப்பினாலும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. தமிழகத்தின் வடவெல்வையாகிய வேங்கடத்தைப் புல்லி என்பான் ஆண்டு வந்தான் எனவும், அவன் கள்வர் எனவும், களவர் எனவும் வழங்கப்பட்ட ஒர் இனத்தைச் சேர்ந்தவன் எனவும் சங்க இலக்கியங்கள் அறிவிக்கின்றன. 'கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன்தலை நன்னாட்டு வேங்கடம்' 'புடையலம் கழற்கால் புல்லிக்குன்றம்' . "புல்லிய - வேங்கட விறல் வரை' ே களவர்” என்ற சொல் கன்னடத்தில் களபடு' என மாறும். அது, வடமொழியில் 'களப்ரா' என மாறும்; அது மீண்டும் தமிழில் வந்து வழங்கும் போது களப்பிரர்' என ஆகும். ...