பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா, கோவிந்தனார். 49. சங்க காலத்தில் தமிழ் நாடாண்ட மூவேந்தர்களும், குறுநில மன்னர்களும், தம்முள்ளே போரிட்டுப் போரிட்டு வலுவிழந்திருந்த நிலையில், வேங்கடத்தை ஆண்டிருந்த களவர் என அழைக்கப்படும் அக்களப்பிரர்கள், தமிழகத்துள் புகுந்து சோழ, பாண்டியப் பேரரசுகளை வென்று தம் ஆட்சியை நிறுவிக் கொண்டனர். * அவ்விருண்ட காலத்தவர் எனக் கருதத் தக்கவரும் புத்த சமய வளர்ச்சி குறித்து ஈழநாடு சென்றவரும் ஆகிய புத்த தத்தர், காவிரி நாட்டைக், களப்பிரகுலத்தவனாகிய அச்சுத விக்கந்தன் ஆட்சி புரிந்தபோது, அக்காவிரிக் கரை ஊராகிய பூத மங்கலத்துப் பள்ளியில் இருந்து, "விநய வினிச்சயம்” என்ற நூலை இயற்றியதாகக் கூறியுள்ளார். அச்சுதக் கனப்பாளன் என்னும் பெயர் கொண்ட ஒருவன், மூவேந்தர்களையும் வென்று, அம்மூவரசுகளையும் தன் ஒரு குடைக் கீழ்க் கொண்டு வந்தான் என்று, யாப்பருங் கலக்காரிகை மேற்கோள் செய்யுள் ஒன்றும், பாப் பருங்கல விருத்தி மேற்கோள் செய்யுள் ஒன்றும் கூறுகின்றன. 'கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர் வேல் அச்சுதன்' 'பொருகுடை வளாகம் ஒருகுடை நிழற்றி இரு பிறப்பாளர்க்கு ஈந்து மணம் மகிழ்ந்து அருள்புரி பெரும்புகழ் அச்சுதக் கோவே' தொண்டை நாட்டில், களந்தை என்னும் இடத்தில் கூற்றுவன் என்ற பெயரில் ஒர் அரசன் இருந்தான்; பின்னர், கூற்றுவ நாயனார் என்ற பெயரால் அழைக்கப்பட்ட அவ் வரசன் களப்பிரர் குடியில் வந்தவனாவன் என்கின்றார் நம்பியாண்டார் நம்பிகள்.