பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. காலத்தோறும் தமிழகம். 'ஒதம் தழுவிய ஞாலமெல்லாம் ஒரு கோயில் வைத்தான் கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவேனே" பாண்டியப் பட்டயங்களுள் ஒன்றான வேள்விக் குடிச் செப்பேடு, களப்ரன் என்னும் கவியரசன், பல பேரரசர்களை அறவே அழித்து, அவர்கள் நாட்டைத் தனதாக்கிக் கொண் டான் என்று கூறுகிறது. "அளப்பரிய அதிராசரை அகலநீக்கி அகலிடத்தைக் களப்ர னெனும் கவியரசன் கைக் கொண்டான்' கருநாடர் காவலன் ஒருவன், கடல்போன்ற நாற்படை கொண்டு தென்னாடு போந்து, பொதிய மலைக்குரிய தமிழ் மன்னனை வென்று மதுரையைக் கைக்கொண்டான் என்று பெரிய புராணத்தில், மூர்த்தி நாயனார் புராணம் கூறுவதும் வேள்விக் குடிச் செப்பேட்டுச் செய்தியை உறுதி செய்கிறது’ 'கானக்கடி சூழ்வடுகக் கருநாடர் காவலன் மானப்படை மன்னன் வலுந்து நிலம் கொள்வானாலி யானைக் குதிரைக் கருவிப் படைவீரர், திண்தேர் சேனைக் கடலும்கொடு தென் திசை நோக்கி வந்தான்' 畿, “வந்துற்ற பெரும்படை மண்புதையப் புரப்பிச் சந்தப் பொதியிற்றமிழ் நாடுடை மன்னன் வீரம் சிந்தச் செருவென்று தன் ஆணை செலுத்து மாற்றாற் கந்தப் பொழில் சூழ் மதுரைபுரி காவல் கொண்டான்", இவ்வாறு சோழரையும் பாண்டியரையும் வெற்றி கொண்டு தமிழகத்தை ஆளத் தொடங்கிய களப்பிரர், கி. பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில், பல்லவன் சிம்ம விஷ்ணுவினாலும், பாண்டியன் கடுங்கோனாலும் வென்று அழிக்கப்பட்டனர்.19