பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் $1. சோணாட்டிலும், பாண்டிய நாட்டிலும், இவ்வாறு ஆற்றல் குன்றிய களப்பிரர், சோணாட்டுச் செந்தலையைச் சுற்றிய பகுதியிலும், பாண்டிநாட்டுப் புதுக் கோட்டையைச் சுற்றிய பகுதியிலும் முத்தரையர் என்ற பெயரோடு வாழ்ந்து வந்தனர்; இயல்பாகவே போர்ப் பண்பு வாய்க்கப் பெற்றிருந்த அவர்கள், வடக்கே தோன்றிய பல்லவர்க்கும், தெற்கே தோன்றிய பாண்டியர்க்கும் இடையில் நடைபெற்ற போர்களில், ஒரு கால் பாண்டியர்க்கும், பிறிதொருகால் பல்லவர்க்கும் என மாறி மாறிப் படைத் துணையாகிப் பயன் பெற்று வந்து, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சோழப் பேரரசை நிறுவிய விஜயாலய சோழனால் அறவே அழிக்கப் பெற்றனர்.1 களப்பிரர், முதலில் பெளத்தராகவும், பின்னர்ச் சமண ராகவும் வாழ்ந்தமையால், தமிழகத்தில் சைவ, வைணவங் களாகிய வைதீக சமயங்கள் மறைந்து பெளத்த சமண சமயங்கள் வாழ்வு பேற்றன. களப்பிரரின் தாய் மோழியாகிய பிராகிருதம் செல் வாக்குப் பெற, தமிழ் புறக்கணிக்கப் பெற்றது; ஆயினும், தங்கள் சமயக் கருத்துக்களைத் தமிழ்நாட்டு மக்களிடையே புகுத்த, அம்மக்களின் தாய்மொழியாம் தமிழின் துணை வேண்டி நின்றமையால், தமிழும் ஒரளவு வளர்ச்சி பெற்றது. மதுரையில் திராவிடச் சங்கம் என்ற பெயரால் ஒர் அமைப்பு உருவாயிற்று. பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் பெரும் பாலானவை இக்காலத்தில் தான் தோன்றின; காவியங்கள் தோன்றுவதற்கும் இச்சங்கமே காரணமாயிருந்தது. முத் தரையர் கோவை என்ற நூால் ஒன்று இருந்ததாக யாப்பருகி கல விருத்தி உரையால் உணர்கிறோம்.