பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. பல்லவர்கள் தோற்றம் பல்லவர்கள் யார்? எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்? எங்கிருந்து வந்தவர்கள் என்ற ஆராய்ச்சி இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் தொட்டுப் பல்வேறு வரலாற்றுப் பேராசிரியர்களால் நடைபெற்று வருகிறது என்றாலும், எல்லோரும் ஒரு சேர ஒப்புக் கொள்ளத் தக்க முடிவு இன்று வரை உருவாக வில்லை. - திரு. வெங்கய்யா "மேற்கிந்தியாவைச் சேர்ந்த பாரசீக மரபினராகிய பஹ்லவரும் பல்லலரும் ஒருவரே. ருத்ரதாமன் கீழ்ப்பணி புரிந்திருந்த பஹ்லவர், அவன், ஆந்திர அரசன் கெளதமீ புத்ர சதகர்ணியோடு நடத்திய போரின் விளைவாக மேற்குக் கரையிலிருந்து கிழக்குக் கரைக்கு வந்தவராதல் வேண்டும்' என்று திரு. வெங்கய்யா அவர்கள், கல்வெட்டு ஆய்வுகளின் 1906 ஆம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளார்!! திரு. எஸ். ரைஸ் - "மேற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களும், கெளதமீ புத்ர சதகர்ணியால் அழிக்கப்பட்டவரும், பார்த்தியன்' எனப் பொருள்படும் பிராகிருத சொல்லாகிய பஹ்லவர் என்ற சொல்லால் குறிப்பிடப் படுபவரும் ஆகிய மக்களும், தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களும், பல்லவர் என்ற சொல்லால் குறிப்பிடப்படுபவரும் ஆகிய மக்களும் ஒர்