பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 காலந்தோறும் தமிழகம் இனத்தைச் சேர்ந்தவரே" என்று, கல்வெட்டுக்களில் மைசூரும், குடகும் என்ற நூலில் திரு. எஸ். ரைஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். - பேராசிரியர் திரு. துப்ராய் பல்லவர்களைப் பாரசீக மரபினர் எனச் சொல்வதற்கு இல்லை. தென்னி தியா மீது பாரசீகப் படையெடுப்பு நிகழ்ந்தது என்பதற்கான சான்று எதுவும் இதுவரை கிடைக்க வில்லை. ருத்ரதாமன் காலத்தில் நாகர்களுக்கும், சூட்டு நாகர்களுக்கும் அண்மையில் வாழ்ந்த ஓர் இனத்தவரே பல்லவர். நாகர் மகளை மணந்துக் கொண்டதன் வாயிலாகக் காஞ்சி அரசுரிமை பெற்ற சிவஸ்கந்த நாகனே 'முதற் பல்லவன் என்று பேராசிரியர். திரு, துப்ராய் அவர்கள் தென்இந்தியாவின் பழைய வரலாறு’ என்ற நூலில் கூறி யுள்ளார். - வின்சென்ட் ஸ்மித் 'இந்தியாவின் பழைய வரலாறு' என்ற நூலை எழுதிய வின்சென்ட் ஸ்மித் அவர்கள், 1904ல் வெளிவந்த அந்நூவின் முதற்பதிப்பீல், 'பல்லவர்களின் குலமூலம் நிலையாக உறுதி செய்யும் வரை, பல்லவர்களும், பஹ்லவர்களும் ஒருவரே எனக் கருதலாம்' என்றவர், 1908ல் வெளிவந்த இரண்டாம் பதிப்பில், "அவர்கள் சென்னை மாநிலத்தின் வடபகுதியாகிய வேங்கி நாட்டைச் சேர்ந்த ஒர் இனத்த வராகலாம்” எனத் தம் முன்னைய கருத்தைச் சிறிதே மாற்றிக் கூறி, மூன்றாம் பதிப்பில், 'பல்லவர், பஹ்லவர் என்ற சொற்களுக்கிடையே நிலவும் எழுத்து ஒருமைப்பாடு, வரலாற்றுப் பேராசிரியர்கள் பலரையும், பாரசீக நாட்ட வராகிய பஹ்லவ்ரையும், காஞ்சி நாட்டவராகிய பல்லவரை யும் ஓர் இனத்தவராகக் கருதுமாறு செய்து விட்டது. ஆனால், தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வு, அக்