பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 57 கொள்கையை அரண் செய்ய வில்லை. மாறாக, பல்லவர்கள் தென்னிந்தியப் பழங்குடியினர் என்பதையே உறுதி செய் கின்றன” என முடித்துள்ளார்." இராஜ சேகரர் சுர்ஜர மன்னர் அவைக்களப் புலவராக இருந்து இந்தியப் பெருகாடு முழுதும் சுற்றிப் பார்த்து எழுதிய தம் முடைய நிலநூலில், பல்லவர்களைத் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாகவும், பஹ்லவர்களைச் சிந்துநதிக்கு அப்பாற்பட்டவர்களாகவும் காட்டியுள்ளார். பஹ்லவர், பல்லவர் என்ற சொற்களுக்கிடையே நிலவும், எழுத்து ஒருமைப்பாடு ஒன்றே கொண்டு, இருவரை யும் ஓர் இனத்தவராகக் கருதுவது முறையாகாது ஆதலாலும், மேற்கிந்தியாலைச் சேர்ந்த பஹ்லவர், கிழக்கு நோக்கிக் குடி பெயர்ந்ததற்கான சான்று எதுவும் இல்லை, பல்லவர் பட்டயம் எதினும் அத்தகைய குடி பெயர்ச்சி குறிப்பிடப்படவில்லை ஆதலானும், ருத்ரதாமனின் அமைச்சன் சுவிசாகன் என்பதும், அவன் பஹ்லவர் இனத்தைச் சார்ந்தவன் என்பதும் உண்மையே என்றாலும், அவனோ, அவன் மரபினரோ, தென்னிந்தியப் பல்லவர் களோடு தொடர்புடையவராவர் என்பதை உறுதிச் செய்யும் சான்று எதுவும் இல்லை. பல்லவர் பட்டயங்களில் கூறப்படும் பல்லவர் முன்னோர் பட்டியவில், அப்பெயர் குறிப்பிடப்படவில்லை ஆதலாலும், பஹலவ குலச் சிற்றரசன் ஒருவன் நாகர் மகளை மணந்து கொண்டான் என்பதற்கான சான்று எதுவும் இல்லை ஆதலாலும், பஹ்லவ குலச் சிற்றரசன் ஒருவன் நாகர் மகளை மணந்து கொண்டான் என்பதற்கான சான்று எதுவும் இல்லை ஆதலாலும், பல்லவர் பட்டயங்க களுள் ஒன்றான வேலூர் பாளையம் பட்டயத்தில் நாகர் கா தமி-4 -