பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 காலந்தோறும் தமிழகம் குலத்தோடு கொண்ட மணத்தொடர்பு குறிப்பிடப் பட்டுள்ளது என்றாலும், அதில் கூறப்பட்டிருப்பவன் வீரக்குர்ச்சன் என்பவனே அல்லது சிவஸ்கந்தன் அல்லன் ஆதலாலும், பஹ்லவர் தென்னிந்தியாவில் குடியேறியதாகக் கூறப்படும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், அங்கு, 'தொண்டையர்' என்ற இனத்தவர் வாழ்ந்து வந்தனர் என்பதை, யாரும் நினைத்துப் பார்த்தாகத் தெரியவில்லை ஆதலாலும், பல்லவர்களைப் பஹ்லவராகக் கருதுவது தவறான முடிபாகும் எனக் கொள்க. திருவாளர்கள். வின்சென்ட் ஸ்மித், இராஜசேகரர் கொள்கைகளும் இம் முடிவுக்கே அரண் செய்வதும் அறிக. திரு. இராசநாயகம் "இலங்கையின் வடமுனையாகிய யாழ்ப்பாணத்தை அடுத்த மணிபல்லவமே பல்லவர் பிறப்பிடம். மணிமேகலை யில் கூறப்பட்ட் கிள்ளி வளவன் மணந்த, வளைவாணன் மகளாகிய பீலிவளை, நாகர் குலத்தவள்; அவள் பிறப்பிடம் இம்மணி பல்லவமே; அவள் பெற்ற மகனே முதற்பல்லவன். தொண்டைக் கொடி சுற்றி விடப்பட்டாமையால், தொண்டைமான் என்றும், கடல் அலைகளால் கரை சேர்க்கப்பட்டாமையால் திரையன் என்றும், அழைக்கப் பட்டான்; அம்மரபினரே, தம் தாயகப் பெயராகிய மணி பல்லலத்தைத் தம் பெயரில் தாங்கிப் பல்லவர் என அழைத்துக் கொண்டனர்" எனத் திரு. இராசநாயகம் அவர்கள் கூறியுள்ளார்." - - பல்லவர் பட்டயம் கூறும், பல்லவர் குல மூதாதையர் பெயர்ப் பட்டியலில், சோழர், நாகர் கூறப்படவில்லை ஆதலாலும், "கங்கை நீரில் பிறந்த க்ருதாசி என்ற நீரர மகளுக்கும், பாரத் வாஜ முனி வருக்கும் பிறந்தவர் துரோணர்: துரோணரின் மகன் அசுவத்தாமன்: அசுவத்தாமனுக்கும், மதனி என்ற அர மகளுக்கும்