பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 59 பிறந்தவன் பல்லவன்’ எனப் பல்லவர் கூறிக் கொள்ளும் பாரத்வாஜ கோத்திரம் தமிழ் மன்னர்கள் அறியாதது ஆதலாலும், பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிரா கிருத மொழியிலும், வடமொழியிலும் ள்ளனவே ஒழிய, தமிழில் ஒன்று கூட இல்லை ஆதலாலும், பல்லவர் அரசவையில், வடமொழிப் புலவர்கள் வீற்றிருந்தனரே அல்லது, தமிழ்ப் புலவர் ஒருவர் கூட இடம் பெறவில்லை ஆதலாலும், 'சோழர்களின் கடல் போன்ற பெரும் படையைப் பாழ் செய்யும் வடவைத் தீ எனத் தம்மைக் கூறிக் கொள்வதன் மூலம், பல்லவர்கள், தமிழரசர்களைத் தம் பகைவர் களாகவே கருதினார்கள் எனப் புலப்படுவதாலும், நாகர் மகள் மணத் தொடர்பு, பல்லவர் பட்டயங்களில் கூறப் பட்டிருந்தாலும், அது வட அரசர்களோடு கொண்டதாகக் கூறப்பட்டுள்ளதே அல்லது இலங்கை அரசர்களோடு கொண்டதாகக் கூறப்படவில்லை ஆதலாலும், பல்லவர் என்ற பெயர், சங்க கால இலக்கியம் எதிலும் இடம் பெற வில்லை ஆதலாலும், பல்லவர்களைத் திரையன் மரபின ராகக் கொள்வதும் பொருந்தாது. - வடபெண்ணை, தென் பெண்ணை ஆறுகளுக்கு இடைப் பட்ட தொண்டை மண்டலம், பண்டு, அருவாநாடு, அருவா வடதலைநாடு என்ற பெயர்களால் வழங்கி வந்தது; அந் நாட்டும் பழங்குடியினர் குறும்பர் என அழைக்கப் பெற்றனர்; தொண்டை மண்டலத்தை இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரித்து ஆண்டவர் என மதிக்கப் பெற்றவர்; அவர்கள் தொழில் ஆடு, மாடு மேய்ப்பதாம். அதனால், அவர்கள் 'பாலவர்” (பால்- அவர் பால் அளிப்பவர் அல்லது பால் கறப்பவர்) என்று அழைக்கப் பெற்றனர். 'பாலவர்' என்பது காலப் போக்கில் 'பல்லவர்' எனத் திரிந்து வழங்கலாயிற்று; ஆகவே தொண்டை நாட்டுப் பழங்குடியினராம் குறும்பரே பல்லவராவர் எனக் கொள்வர் திருவாளர்களாகிய, எலியட் செவேல் போலும் வரலாற்றுப் பேராசிரியர்கள்."