பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 காலந்தோறும் தமிழகம் கடைச் சங்க காலமாம் கி. பி. இரண்டாம். நூற்றாண்டில், சோழர் அரியணையில் இருந்த, திருமா வளவன் என அழைக்கப்படும் கரிகாற் பெருவளத்தான், இவ்வருவாளர் முதலாம் வடவரசர் பலரை அழித்தான். எனப் பட்டினப்பாலை கூறுகிறது, "தொல் அருவாளர் தொழில் கேட்ப, வடவர் வாடக், குடவர் கூம்ப" "தென்பாண்டி. குட்டம், குடம், கற்கா, வேண், பூழி பன்றி, அருவா, அதன் வடக்கு நன்றாய சீதம், மலாடு, புனல்நாடு. செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிருநாட்டு எண்' என்ற வெண்பா உணர்த்துமாறு, பன்னிரண்டு உள்நாடு களாகப் பிரிக்கப் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த, அருவா அருவாவடதலை ஆகிய அவ்விரு உள்நாடுகளை, அப்போது ஆண்டு கொண்டிருந்த ஆந்திரச் சாதவாகனப் பேரரசே கரிகாலனால் அழிக்கப் பெற்ற அரசாதல் வேண்டும். கரிகாலனை அடுத்துக் கிள்ளி வளவன் என்ற சோழர் குலத்தவனுக்கும், நாகநாட்டு வளைவாணன் மகளாகிய பீலிவளைக்கும் பிறந்த தொண்டைமான் இளந்திரையன். காஞ்சிக் கோட்டையில் கோலோச்சியிருத்தல் வேண்டும். அவனுக்குப் பின், சோழர் குலத்தில், நலங்கிள்ளி, நெடுங் கிள்ளி போலும் உடன்பிறந்தார்களுக்கிடையே, அரசுரிமை காரணமான போர், சோழநாட்டு மண்ணில் தலைவிரித் தாடத் தொடங்கி விட்டமையால் சோழர், காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட தோண்டை மண்டலத்தில் கருத்து செலுத்த இயலாத நிலை ஏற்பட்டு விட்டது, இவ்வாறு ஆந்திரப் பேரரசும் அழிந்து போக, சோழப் பேரரசும் வலுவிழந்து போக, அச் சூழ்நிலையில், ஆந்திரப் பேரரசர்களின் கீழ்க், குறுநிலத் தலைவர்களாகவும் ஆட்சி