பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. சிம்ம விஷ்ணு புகழ்பெற்ற பிற்காலப் பல்லவருள் முதல்வன் சிம்ம விஷ்ணு. அவன் மகனான மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசத்தில், "சிம்ம விஷ்ணு, பல்லவ குலம் என்ற உலகைத் தாங்கும் மலை போன்றவன்; பல நாடுகளை வென்றவன் எனச் சிறப்பிக்கப் பட்டுள்ளான். வேலூர் பாளையம் பட்டயம், "காவிரி பாயும் வளமான சோழநாட்டைக் கைப் பற்றின்ான்” எனக் கூறுகிறது. காசக்குடிப் பட்டியம், "சிம்ம விஷ்ணு, களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர்களை வெற்றி கொண்டான்' எனக் கூறுகிறது. 'பல்லவர் மரபில் தோன்றிய சிம்மவிஷ்ணு, கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப் பகையை அறவே நீக்கினான்’ என வரும் அவந்தி சுந்தரி கதா சாரத் தொடரில் உள்ள 'கற்றவர் கூட்டம்' என்ற சொல்லுக்கு வரலாற்றுப் பேராசிரியர்கள் காஞ்சி என்ற பொருள் கொண்டனர். காஞ்சியிலிருந்து பட்டயம் விட்ட பல்லவ அரசர்களுள் இவனே முதல்வன். கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூரில் கண்டெடுக்கப்பட்ட பட்டயத்தில், சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்ற தொடர் காணப்படுகிறது. இவற்றால், ாவேரி வரை பரவியிருந்த தமிழ்நாட்ட்ைக் கைப்பற்றி ாஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவப் பேரரசை நிறுவிய பெருமை சிம்ம விஷ்ணுவையே சாரும் என்பது: புலனாகிறது. -