பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 63 சிம்ம விஷ்ணு, வைணவன் என்பது, அவன் பெயராலேயே புலப்படுவதோடு, உதயேந்திரப் பட்டயத்தில் வரும் 'பக்தி ஆராதித்த விஷ்ணு, சிம்ம விஷ்ணு' என்ற தொடராலும் புலப்படும். அஜந்தாவிலும், கிருஷ்ணை ஆற்றங்கரையிலும், வட நாட்டரசர்கள், கற்பாறைகளைக் குடைந்து கோயில்கள் அமைத்திருப்பதைப் போன்றே, சிம்மவிஷ்ணு, அத்தகைய கோயில்களைத் தமிழ் நாட்டில் உருவாக்கினான். தமிழ் நாட்டில், குகைக் கோயில் கண்ட முதல்வன், சிம்ம விஷ்ணுவே, சிங்க உருவங்கள் அமைந்த சீயமங்கலம் குகைக் கோயிலும், சிம்ம விஷ்ணு, அவன் மனைவியர், அவன் மகன் மகேந்திரன், அவன் மனைவியர்களின் உருவங்கள் செதுக்கப் பட்ட மாமல்லபுரம் ஆதிவராகர் கோயிலும் சிம்ம விஷ்ணுவால் வெட்டப்பட்டன வாதல் வேண்டும். - சிம்ம விஷ்ணு சிறந்த புரவலன்: கீழைச் சளுக்கிய அரசவையிலும், கங்கநாட்டு அரசவையிலும் சிறந்து விளங்கிய வடமொழிப் புலவராம் பாரவியின் பாடல் ஒன்றை அவர் மனைவி பாடக் கேட்டு, அப்பாடலின் சொல் நயம் பொருள் நயங்களால் ஈர்க்கப்பட்டு, அவரை வர வழைத்துத் தன் அவைக்களப் புலவராக்கி மகிழ்ந்தான் எனத் தண்டி ஆசிரியர் இயற்றிய அவந்தி சுந்தரி கதை கூறுகிறது. மேலைச் சாளுக்கிய இரண்டாம் புலிகேசியும், கீழைச் சாளுக்கிய விஷ்ணுவர்த்தனனும், கங்கநாட்டுத் துர்வி நீதனும், பாண்டியன் மாறவர்மன் அவனி சூளாமணியும் சிம்மவிஷ்ணுவின் சமகால அரசராக விளங்கினர்.