பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. மகேந்திரவர்மன் சிம்ம விஷ்ணு வழிவந்த பிற்காலப் பல்லவருள் மிகச் சிறந்து விளங்கியவன் மகேந்திரவர்மன். நூற்றைம்பது ஆண்டுக் காலம் தொடர்ந்து நடைபெற்றப் பல்லவர்சாளுக்கியர் போர், கொடுமையின் எல்லையைத் தொட்டது இவன் காலத்தில்தான்; சமணம் உயர்நிலை பெற்றதும், பல்லவ வேந்தர், சமணத்தைக் கைவிட்டுச் சைவனாக மாறி யதும், அதற்குத் துண்ை நின்ற நாவரசர் வாழ்ந்ததும் இவன் காலத்தில்தான்; பாறைகளைக் குடைந்து குகைக் கோயில் கட்டும் பணி சிறந்ததும் இவன் காலத்தில்தான். சங்ககால மறைவு முதல், ஐந்து நூற்றாண்டுக் காலம் வரை ஒயாப் போரால் அமைதியிழந்திருந்த தமிழகத்தில் அமைதி நிலவச் செய்தவன் இவனே; சிற்பம், ஓவியம், இசை நடனம் முதலாம் நுண்கலைகளுக்கு உயிர் ஊட்டியவனும் இவனே. வாதாபியைத் தலைநகராகக் கொண்ட மேலை சாளுக்கிய மரபில் வந்த இரண்டாம் புலிகேசி, காஞ்சி மீது படையெடுத்தான்; அவன் படைப்பெருமை முன் நிற்கா மாட்டாத மகேந்திரவர்மன், பகைவன் படைபலம் குறைய வும், தன் படை பலம் பெருகவும் வாய்ப்புடைய காலம் வரும் வரை காத்திருப்பதே சிறந்த போர் முறையாம் என அறிந்து, தன் படையுடன் காஞ்சிக்கோட்டையுள் புகுந்து சிலகாலம் அடங்கி இருந்து, பின்னர் புள்ளலூர் எனும் இடத்தில், சாளுக்கியர் படையைத் திடுமெனத் தாக்கி