பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவித்தனார் 65 அழித்துத் துரத்தினான். "புலிகேசியின் படை எழுப்பிய தாளி, பல்லவவேந்தனின் ஒளியை மங்கச் செய்தது: கடல் போல் பரந்த சாளுக்கிய படைமுன் நிற்க மாட்டாது, பல்லவன் காஞ்சிக்கோட்டையுள் அடங்கிக் கொண்டான்; சாளுக்கியன் படையைச் சேர்ந்த யானைகளின் மதநீர் பாய்ந்து காவிரி நீர் கலங்கிவிட்டது. பல்லவப் பணி போக்கும் கதிரவனாய் சாளுக்கியன் உலா வருவது கண்டு சேர, சோழ, பாண்டியர் களிப்புற்றனர்' எனச் சாளுக்கியப் பட்டயங்களும், “மகேந்திரன், தன் பகைவரைப் புள்ள லூரில் அழித்தான்' என இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வெளியிட்ட காசக்குடி பட்டயமும் கூறுவதால், இப்போரின் போக்கை ஒருவாறு உணரலாம். பல்லவர் பேரரசிற்கு வடமேற்கில் மேலைச் சாளுக்கி யரும், வடக்கில், சோழர் வழிவந்த, ஆந்திர நாட்டில் குடியேறிய, ரேதாண்டுச் சோழர் எனப்படும் தெலுங்குச் சோழரும், வடகிழக்கில் கீழைச் சாளுக்கியரும், மேற்கில், கதம்பர், கங்கர்களும், தெற்கில் சோழர், களப்பிரர்களும், பாண்டியர்களும் ஆட்சிபுரிந்து வந்தனர். சமணனாக அரியணை ஏறிய மகேந்திரவர்மன், அப்ப ரால் சைவனாக மாறினான். அவ்வரலாற்றைப் பெரிய புராணம் பரக்கக் கூறுகிறது. அது, "லிங்கத்தை வழிபடும் குணவரன் எனும் பயர் கொண்ட அரசன், இந்த லிங்கத் தினால், புறச்சமயத்திலிருந்து திரும்பிய ஞானம், உலகத்தில் நின்று நிலை பெறுமாக" எனவரும் திருச்சி மலைக் கோயில் கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டுன்ளது. சங்க காலத்தின் இறுதியில் களப்பிரர் வரலால், தமிழகத்துள் இடம் பெற்று சிறந்து, விளங்கிய சமணம் அழிவுப் பாதை நோக்கி அடியிட்டது இவன் காலத்தில்தான், சைவனாக மாறிய மகேந்திரவர்மன், திருப்பாதிரிப் புலியூரில் இருந்த சமணப் பள்ளியை இடித்துக் கொணர்ந்த கற்களைக் கொண்டு, திருவதிகையில் சிவன் கோயில் கட்டு