பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86; காலந்தோறும் தமிழகம் மளவு சைவ சமயத்தில் ஆழ்ந்து போய் விட்டான், என்றாலும், அவன் வெட்டிய குகைக் கோயில்களில், சில சமணக் கோவில்களாகவும், சில சிவன் கோயில்களாகவும், சில பெருமாள் கோவில்களாகவும் காணப்படுவது, அவன். காலத்திய சமய நிலையை ஒருவாறு உணரத் துணை புரிவ. தாகும். - கடைச் சங்க காலத்தில், கோவில்கள் பல இடம் பெற்றி குத்தன என்றாலும், அவையெல்லாம், சுண்ணாம்பும் செங்கல்லும் கொண்டு கட்டப் பெற்றனவே ஒழிய, பாறை களையும், மலைகளையும் குடைந்து அமைத்த கோவில்கள் தமிழகத்தில் மகேந்திரவர்மன் காலத்தில்தான் முதன் முதவில் இடம் பெற்றன. கிருஷ்ணை ஆற்றங்கரையில் ஆட்சி புரிந்திருந்த விஷ்ணுகுண்டர் என்ற மரபினர்' ஆங்கு அமைத்த குகைக் கோவில்களைப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்ற மகேந்திரவர்மன், அத்தகை: கோவில்களைத் தமிழகத்தில் பல இடங்களிலும் அமைத்தான். சென்னைக்கு அடுத்த பல்லாவரம், செங்கற்பட்டு பகுதியில், திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள வல்லம், காஞ்சிக்கு அருகில் உள்ள மாமண்டூர், வந்தவாசிக்கு அருகில் உள்ள சீயமங்கலம், சோளிங்கர் என வழங்கும் சோழசிங்க புரத்திற்கு அணித்தான மகேந்திர வாடி, தள வானூர், புதுவைக்கு அடுத்த மண்டகப்பட்டு, திருச்சி மலைக்கோயில், நாமக்கல் மலைக் கோயில் ஆகிய இடங். களிலும், மாமல்லபுரத்திலும், மகேந்திரவர்மன் வெட்டிய குகைக் கோயில்களைக் காணலாம். மண்டகப்பட்டுக் குகைக் கோயிலில்தான் "கல், மரம், உலோகம், சுண்ணாம்பு இல்லாமல் பல்லவன் கோவில் அமைத்தான்' என்ற தொடர் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோயில்களின் சிறப்பு இயல்புகள் சில வருமாறு :