பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 67 1. உள்ளறையில் லிங்கம் இருக்கும்; லிங்கங்கள் உருண்டை வடிவின்வாகும். சில குகைகளில், திருமாலும் சமண முனிவரும் இருப்பர். 2. வணக்கம் தெரிவிக்கும் கையினராகவோ, தடிமீது வைத்த கையினராகவோ வாயிற்காவலர் காட்சி அளிப்பர். 3. தூண்கள் எல்லாம் சதுரத் துTண்கள்: மேலும் கீழும் நான்கு பட்டைகளாாவும், இடையில் எட்டு பட்டைகளாகவும், சதுரப் பகுதியில் தாமரை பொறிக்கப் பெற்றும் நிற்கும்: 4. தூண்களில் கல்வெட்டுக்களும், அரசன் பட்டப் பெயர்களும் காணப்படும்: 5. கோயிற் சுவர்களில், புராணக் கதைகளைக் குறிக்கும் நிகழ்ச்சிகள் சிலைகளாக வடிக்கப் பட்டிருக்கும். மகேந்தி; வர்மன் சிறந்த இலக்கியப் புலவனாவன் வடமொழியில் அவன் இயற்றிய மத்த விவாசப் பிரகசனம் என்ற நூலே அதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு. அது காடாலிகன் ஒருவன் செயலைக் கூறுவதாக, அக்காலத்தே நிலவிய காபாலிக சமயம், பாசுபத சமயம், பெளத்த சமயம் போலும்சமயங்களின் தமிழகத்து நிலையைத்டைணர்த்துகிறது. மகேந்திரவர்மன், இசை, நடனம், நாடகம், சிற்பம், ஒவியம் போலும் கவின் கலைகளிலும் சிறத்தவன்; அவற்றைப் பாராட்டி வளர்த்தவன். இது சித்தன்னவாசல் குகைக் கோயிலில் உள்ள காரைச் சுவர்கள் மீது வரையப் பெற்ற வண்ணக் கோலங்களாலும், "இக் கல்வெட்டு, இசை மாணவர் நன்மைக்காக இசை மாணவனாகிய அரசனால் வெட்டப்பட்டது” எனக் கூறும், குடுமியா மலைக் கல்வெட்டாலும், ஸ்வரம், வண்ணம் போலும் இசை நுணுக்கம் பற்றிக் குறிப்பிடும் மாமண்டூர் குகைக்கல் வெட்டாலும் நன்கு புலப்படும்.