பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ. பல்லவர்-சாளுக்கியர் போர் மேலைச் சாளுக்கிய அரியணையில் கி.பி. 610ல் அமர்ந்த இரண்டாம் புலிகேசி, பல்லவ நாட்டின் வட எல்லைக் கண் விளங்கிய கங்க, கதம்ப, கீழைச் சாளுக்கிய நாடுகளை வென்று தனதாக்கிக் கொண்ட பின்னர்ப், பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தான். இட்டோர் பற்றிக் கூறும் சாளுக்கியர் கல்வெட்டு 'புலிகேசியின் படைகள் எழுப்பிய துரளி, பல்லவ வேந்தனின் ஒளியை மங்கச் செய்தது: புலிகேசியின் படைப் பெருமை கண்டு காஞ்சி அரசன் காஞ்சிக் கோட்டைக்குள் ஒ வரி ந் து கொண்டான். சாளுக்கியன் நாற்படையுள் இருந்த யானைகளின் மதநீர் tாய்ந்து, காவிரி கலங்கி விட்டது; புலிகேசிப் பல்லவப்பணி போக்கும் கதிரவனாய்க் காட்சி தந்து, சேர சோழ, பாண்டியனைக் களிப்புறச் செய்தான்” என்கிறது. ஆனால், பல்லவர்க்குரிய காசக்குடிப் பட்டயம், “மகேந்திரன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான்” எனக் கூறுகிறது. இவ்விரு கூற்றுக்களையும் ஒருங்கு வைத்து நோக்கிய வழி, பெரும் படையோடு வரும் புலிகேசியை, எதிர் சென்று போரிட்டுத் துரத்த எண்ணுவது போர்த் தந்திரமாகாது. அவனைத் தமிழகத்துள் நுழையவிட்டு, அவன் ஆங்குப் பல இடங்களுக்கும் சென்று பல காலம் தங்க, அவன் படைவலம் குறையப் பண்ணி, இறுதியில் அழிப்பதே போர் நுணுக்கமாம் என அறிந்த மகேந்திரவர்மன், புலிகேசி, பல்லவ நாட்டுள் புகுத்ததும், தன் படையோடு காஞ்சிக் கோட்டைக்குள்