பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 69 அடங்கி இருந்தான்: எ தி ர் ப் ப ா ர் இல்லாமையால் புலிகேசியும், காவிரியாறு வரையும் சென்று திரும்பினான்; தங்கள் பகைவனாம் மகேந்திரவர்மன் அறவே அழியவில்லை எனினும், புலிகேசியைக் கண்டு ஒடி ஒளிந்து கொண்டதே அவனுக்குத் தோல்வியாம் என்ற உணர்வால், சேர, சோழ, பாண்டியர் மகிழ்ந்தனர்; இறுதியில், புலிகேசி தன் சாளுக்கிய நாடு நோக்கித் திரும்பியதும், மகேந்திரவர்மன் காஞ்சிக் கேர்ட்டையினின்றும் வெளிப்பட்டு, காஞ்சிக்கு வடக்கே, இப்போது பள்ளுர் என வழங்கும் புள்ள லூரில் புலிகேசியை வளைத்துப் போரிட்டு வென்று துரத்தினான்’ என்ற வரலாற்று நிகழ்ச்சி புலப்படுகிறது. மகேந்திரவர்மனால், புள்ளலூரில் தோல்வி கண்ட புலிகேசி அப்பழியைத் துடைத்துக் கொள்வதற்கான காலத்தை எதிர்நோக்கி இருந்தான். மகேந்திரன் மறைய, அவன் மகன் நரசிம்மவர்மன் பல்லவ அரியணையில் அமர்ந் தான் : பல்லவ நாட்டை அழிப்பதற்கு அதுவே ஏற்புடைய காலம் என எண்ணிய புலிகேசி, முன்னினும் பெரிய படையோடு பல்வே நாட்டில் புகுந்து விட்டான். தன் நாட்டுள் புகுந்த புலிகேசி, காஞ்சி வரை வருக எனக் காத்திருந்தான் நரசிம்மவர்மன் , சாளுக்கியர் படை காஞ்சிக் கோட்டையை அணுகி விட்டது என்பதை அறிந்த உடனே நரசிம்மவர்மன், பல்லவர் குலத்து வந்த ஒரு சிற்றரசனும், மானவர்மன் என்னும் இலங்கை அரசனும் துணைவரச் சென்று சாளுக்கியர் படையைத் தாக்கினான்: பரியலம், மணிமங்கலம், சூரமாரம் ஆகிய இடங்களில் கடும்போர் நடைபெற்றது: ஒவ்வொரு களத்திலும் தோல்வியே கண்ட புலிகேசி, தன் நாடு நோக்கி ஓடத் தலைப்பட்டான். பல்லவ நாட்டு எல்லைவரை அவனை-விடாது பின் தொடர்ந்து வந்த நரசிம்மவர்மன், சாளுக்கியர் படையை மேலும் துரத்தி அடிக்கும் பணியைத் தன் படைத் தலைவரும், பிற்காலத்தே சிறுத்தொண்டர் என அழைக்கப்