பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 காலந்தோறும் தமிழகம் பட்டவருமாகிய பரஞ்சோதியார்பால் ஒப்படைந்தான்: படைத்தலைமை ஏற்ற பரஞ்சோதியார், சாளுக்கியர் படையை அவர் தலைநகரம் வாதாபி வரையும் துரத்திச் சென்று, வென்று, வாதாபியைக் கைக்கொண்டு, ஆங்கு, நரசிம்மவர்மன் புகழ்டாடும் :ாக்கள் பொறிக்கப் பெற்ற வெற்றித்துரண் நாட்டிக் காஞ்சி வந்து சேர்ந்தார். இப்போர் பற்றிய நிகழ்ச்சிகளை, "பரியலம், மணி மங்கலம், சூரமாரம் முதலிய இடத்துப் போர்களில் புலிகேசி தோற்று ஓடியபொழுது, வெற்றி என்னும் மொழியை அவன் முதுகாகிய பட்டயத்தின் மீது எழுதிய நரசிம்மவர்மன்' எனக் கூரம் பட்டயமும், நரசிம்மவர்மன் வாதாபியை அடக்கிய அகத்தியனைப் போன்றவன்; வல்லப அரசனை வென்றவன் வாதாபியை அழித்தவன்” என உதய சந்திர மங்கலம் பட்டயமும், நரசிம்மவர்மன், பகைவரை அழித்து, வாதாபியில் வெற்றித்துரண் நாட்டினான்' என வேலூர்ப் பாளையம் பட்டயமும், 'புலிகேசி பகைவர் மூவரால் தோல்வியுற்றான்; வாதாபி கோவில்கள் வருவாய் இழந்து தவித்தன” என, புலிகேசியின் மகனான விக்கிரமாதித்தனின் பட்டயமும், தெளிவாக உணர்த்துகின்றன: இவற்றுள் முன்னைய மூன்றும் பல்லவப் பட்டயங்கள்; நான்காவது, சாளுக்கியப் பட்டயம். - "மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகத் துளை நெடுங்கை - வரையுகைத்தும் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னன எண்ணிலகவர்ந்தே இகலரசன் முன் - - - கொணர்ந்தார்" என்ற பெரியபுராணச்செய்யுள், வாதாபி கொண்டதில் பரஞ்சோதியார் பங்கைத்தெளிவுற உணர்த்தி நிற்கிறது.